Episodes

Thursday Oct 07, 2021
உலகத்தின் போர்
Thursday Oct 07, 2021
Thursday Oct 07, 2021
2 கொரிந்தியர் 10: 3-5
உலகத்தின் போர்
நாம் இந்த உலகில் வாழும்போது, சவால்களைத் தவிர்க்க முயற்சிக்காமல் அவற்றை சந்திக்க வேண்டும். நாம் அவற்றிலிருந்து தப்பி ஓட முயற்சிக்காமல், அவற்றை மேற்கொள்ள வேண்டும்.
வாழ்க்கையின் போராட்டங்களையும், நம்மைச் சுற்றியுள்ள கஷ்டங்களை எதிர்கொள்ளாமல், தப்பித்து கொள்ள ஒரு அடைக்கலத்தை தேடி, எந்த சிக்கல்களும் இல்லாமல் ஜீவிக்க முயற்சிப்பது கிறிஸ்துவத்தன்மை அற்றது.
இயேசு பல போராட்டங்களை சந்தித்தார், உணர்வுப்பூர்வமாகவும், உடல் ரீதியாகவும், எல்லா வழிகளிலும் போராட்டங்களை சந்தித்தவர்களுடன் இருந்தார்.
ஒரு கிறிஸ்தவராக இது நம்முடைய பங்கு. ஒரு பிரச்சினையையோ அல்லது சூழ்நிலையையோ அங்கீகரிக்க வேண்டும், அதை புறக்கணிக்க கூடாது.
நாம் இந்த உலகில் வாழ்ந்தாலும் நமது போரின் ஆயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகள் அல்ல.
நாம் வாழ்க்கையை மாமிசத்தில் எதிர்கொள்வதில்லை. நாம் மற்றொரு பரிமாணத்தில் போராடுகிறோம், என்றாலும் நமது போர் பலவீனமானது அல்ல. அது வல்லமை வாய்ந்தது. அது வெற்றி பெறுகிறது, அது வலிமையானது.
போரின் முக்கிய விதிகளில் ஒன்று, உங்கள் எதிரியை அறிந்து கொள்வது. எதிரியின் தந்திரங்கள் உங்களுக்குத் தெரியாவிட்டால் நீங்கள் ஒரு போர் வீரனாக ஒருபோதும் வெற்றிபெற முடியாது.
உலக பிரகாரமான ராணுவ போரை போல இது ஆவிக்குரிய போரிலும் உண்மை. போரின் இரண்டாவது விதி, உங்கள் ஆயுதங்களை அறிந்து கொள்ளுங்கள். எதிரியை எவ்வாறு சந்திக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள், உங்கள் ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
நாம் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் போராடவில்லை "(எபேசியர் 6:12), என்று அவர் கூறுகிறார். நாம் மனிதர்களின் மனதிலும் சிந்தனையிலும் கிரியை செய்பவர்களுக்கு எதிராக நாம் யுத்தம் செய்கிறோம். மனித சமுதாயத்தில் வளர்ந்து வரும் தீமையை நீங்கள் வேறு எப்படி விளக்க முடியும்?
நாம் கர்த்தருடைய வார்த்தையை போதித்து, உண்மையைக் கற்பித்து, ஒரு புதிய ஏற்பாடு, அல்லது ஒரு வேதாகமத்தையோ அல்லது ஒரு துண்டுப்பிரதிகளையோ ஒருவருக்குக் கொடுத்தால் மட்டும் போதாது. வேதம் நற்செய்தியைப் பரப்புவது பற்றி பேசுவது, இவற்றை அல்ல.
ஒழுக்கமின்மை, அவமானம், பாகால் வழிபாடு, வாதங்களால் வாழும் கொரிந்து நகர மக்களுக்கு பவுல் இதை எவ்வாறு எடுத்துக்காட்டினார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பவுல் அவர்களிடம், நான் உங்களிடத்தில் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப்போடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை. இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்.(1 கொரிந்தியர் 2: 1-2). அதாவது, நான் உங்களுடன் விவாதிக்க வரவில்லை. நான் இந்த உலக ஞானத்துடன் வரவில்லை என்று கூறினார்.
உங்கள் வாதங்களை எதிர் வாதத்துடன் நிறுத்த நான் வரவில்லை. நான் தத்துவ விவாதத்திற்கு வரவில்லை. மனித இரூதயத்தின் பெருமையிலிருந்து விடுதலை மற்றும் ஆறுதல் இயேசு கிறிஸ்துவிடம் உள்ளது என்பதை நான் உங்களுக்கு அறிவிக்க வந்தேன்; பெருமை சிலுவையால் அழிக்கப்பட்டது.
இந்த சிலுவையின் அர்த்தத்தையும், உங்களுக்காக மறித்தவர் என்ன செய்தார் என்பதையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளும்போது, நீங்கள் அவருடைய பாதத்தில் முழங்கால் படியிடும் போத, உங்கள் வாழ்க்கையில் உங்கள் பெருமையை அழிக்க அவருடைய வல்லமை வெளிப்படுகிறது.
நீங்கள் இதை சமூகத்திற்கு கொண்டு வரும்போது, கர்த்தர் உங்களை வல்லைமையாக பயன்படுத்துவார். அதுதான் நற்செய்தியின் வல்லமை. அதுதான் கிறிஸ்துவை உடையவர்களின் வல்லமை. அது தான் சமூகத்திற்கு உதவும் செய்தி.
இது ஒன்றே வழி, வேறு வழி எதுவும் இல்லை. உலகம் அதன் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய சில மாற்றுகளில் இது ஒன்றல்ல.
இது ஒன்றே வழியாகும். நீங்கள் அதை விசுவாசிக்க தொடங்கும் போது, உங்கள் இரூதயத்தில் உங்கள் அக்கம்பக்கத்தினர், உங்கள் நண்பர்கள் மற்றும் வாழ்க்கையின் பிரச்சனைகளில் போராடும் மற்றவர்களுக்கு இதுவரை இல்லாத ஒரு மனதுருக்கம் உங்களில் உருவாவதை காண்பீர்கள்.
உங்கள் கைகளில் தீர்வு உள்ளது, மனிதனின் பிணைப்பை உடைக்கக்கூடிய, அவர்களை விடுவிக்கக்கூடிய ஆண்டவரை பற்றிய செய்தி.
கர்த்தர் நம் கையில் வைத்திருக்கும் இந்த திட்டம் எவ்வளவு பெரியது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் மனதுருக்கத்துடன் வேலை செய்யத் தொடங்கும்போது, சமூகத்தை மாற்றும் பெரும் வல்லமை வெளியிடப்படுகிறது.
ஜெபிப்போம்:
எங்கள் பிதாவே, நற்செய்தியின் மகிமைக்காக நாங்கள் உங்களுக்கு நன்றி கூறுகிறோம். ஆண்டவரே, நீங்கள் எங்களுக்குச் செய்ததற்காக நாங்கள் முழு இருதயத்திலிருந்தும் நன்றி செலுத்தவும், அதை மற்றவர்களுக்கு வழங்குவதற்கு எங்கள் ஏக்கத்தை அதிகரியும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம், ஆமென்.

Wednesday Oct 06, 2021

Wednesday Oct 06, 2021

Tuesday Oct 05, 2021
எங்கள் போரின் ஆயுதங்கள்
Tuesday Oct 05, 2021
Tuesday Oct 05, 2021
2 கொரிந்தியர் 10: 1-4
எங்கள் போரின் ஆயுதங்கள்:
- பவுல் கொரிந்தியர்களின் விசுவாசிகளை சாந்தத்தோடும் மென்மையோடும் அணுகி, அவர்களுடன் இருக்கும்போது நான் பயப்படுகிறேன் என்றும் அவர்களிடமிருந்து தொலைவில் இருக்கும்போது தைரியமாக இருப்பேன் என்றும் சொல்கிறார்.
இந்த உலகத்தின் தரத்தின்படி வாழ்கிறோம் என்று நினைக்கும் சிலரிடம் நான் எதிர்பார்க்கும் அளவுக்கு தைரியமாக இருக்க வேண்டியதில்லை என்று நான் உங்களிடம் கெஞ்சுகிறேன் என்று பவுல் கூறுகிறார்.
அவர் இதைச் சொல்வதற்குக் காரணம், பவுல் கொரிந்திய விசுவாசிகள் மீது கோபமடைகிறார், ஏனென்றால் அவர்கள் உலக இன்பங்களைப் பின்தொடர்ந்து பாவிகள் மற்றும் கேலி செய்பவர்களின் வழியில் நடந்தார்கள். அடிப்படையில், கொரிந்தியர்கள்:
அன்னிய தெய்வங்களை நம்பி வழிபட்டனர். யாகங்கள் செய்து, கோவில்கள் கட்டினார்.
புகழ், பெருமை, பணம் மற்றும் பாலியல் ஒழுக்கக்கேடு ஆகியவற்றிற்கு பின்னால் ஓடிக்கொண்டிருந்தனர். சுதந்திர சிந்தனையாளர்களாக இருந்தனர், அவர்கள் விரும்பும் எதையும் செய்ய முடியும் என்ற மனப்பான்மையை அவர்கள் வளர்த்துக் கொண்டனர்.
பவுல் மற்றும் அவரது போதனைகளுக்கு எதிரான விமர்சனம் அதிகரித்து
தேவாலயம் பிரிவினைகளை கடந்து ஒற்றுமை இல்லாமல் இருந்தது. (I கொரிந்தியர் 3)
தேவனின் உருவமாகிய கிறிஸ்துவின் நற்செய்தியின் ஒளியை அவர்கள் பார்க்க முடியாதபடி சத்துரு அவிசுவாசிகளின் மனதை குருடாக்கியுள்ளது . (2 கொரிந்தியர் 4: 4)
இந்த நடைமுறை விஷயங்களுக்கிடையில், பவுல் ஒரு விசுவாசமான வாழ்க்கையை நடத்த அவர்களை ஊக்குவிக்க, கிறிஸ்து கொடுத்த சாந்தம் மூலம் விசுவாசிகளை அணுக விரும்பினார்.
திருச்சபை மற்றும் விசுவாசிகள் ,இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதையும் வழிபடுவதையும் இலக்காகக் சுற்றியுள்ள விஷயங்கள் இவை ,என்பதை பவுல் தெளிவாக அறிந்திருந்தார்.
பவுல் , அவர்கள் இந்த உலகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், போர் இந்த உலகத்தின் மாம்சத்திற்கு எதிரானதல்ல ,தீய சக்திகளுக்கு எதிரானதாகும் என்று பவுல் அறிந்திருந்தார்.(எபே. 6:12).
இருளின் இராஜியத்திற்கு எதிராக போராட, உலக ஆயுதங்கள் பயன்படுத்தப்படாது மற்றும் பயன்படுத்த முடியாது, ஆனால் வலுவான கோட்டைகளை இடிக்கும் சக்தி கொண்ட வலுவான ஆயுதங்கள் உள்ளன.
எபேசியர் 6 இல், இந்த கட்டுகளை எவ்வாறு வெல்வது என்பதை பவுல் கற்பிக்கிறார்.
நீதியின் மார்பகம் அமைதின் நற்செய்தியுடன் தயார் நிலையில் பொருத்தப்பட்ட கால்கள்
நம்பிக்கையின் கவசம்,இரட்சிப்பின் தலைக்கவசம் ,ஆவியின் கேடகம்
இவை தேவ கவசத்தின் கூறுகள் ஆகும், மேலும் இது தேவனின் வார்த்தை, மற்றும் இயேசு கிறிஸ்து மீதான நம்பிக்கை ஆகியவற்றுடன் ஒன்றிணைக்கப்படும்போது இதை முழுமையாக பிணைக்க முடியும்.
நாம் வேலைக்குப் பின் ஓடி, நம் குடும்பங்களைப் பார்க்கிறோம்.
அதே நேரத்தில், நம் இதயம், ஆன்மா, மனம் மற்றும் வலிமையை குறிவைக்கும் ஆவிக்குரிய போரின் ஒரு அடுக்கு நம்மைச் சுற்றி உள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சத்துரு எப்போதும் நம் ஜெபத்தின் நேரத்தை பறிக்க போராடுகிறான் .தேவனின் வார்த்தையை தடுப்பதன் மூலம் ,எதிர்மறை எண்ணங்களால் நம் மனதிற்கு உணவளிக்கிறான், சில நேரங்களில் தேவனுடன் நேரத்தை செலவிடாமல் நம் நேரத்தை சமூக ஊடகங்களில் செலவிட வைக்கிறான்.
கட்டுக்களுக்கு எதிராக நாம் எப்படி போராடப் போகிறோம்?
கர்த்தரிலும் அவருடைய வல்லமையிலும் பலமாக, தேவனின் முழு கவசத்தையும் அணியுங்கள், இதனால் நாம் பிசாசின் திட்டங்களுக்கு எதிராக உ ள்ள நிலைப்பாட்டை எடுக்கலாம் .மற்றும் எல்லா சந்தர்ப்பங்களிலும் அனைத்து வகையான
விண்ணபங்களோடு ஜெபிப்போம்.
ஜெபம்
தேவனே, எங்கள் ஆவிக்குரிய சுவர்களை வலுப்படுத்தவும், ஜெபத்தின் மூலம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையை உயர்த்தவும் எங்களுக்கு உதவி செய்யும்...... ஆமென்

Tuesday Oct 05, 2021
Weapons of our Warfare
Tuesday Oct 05, 2021
Tuesday Oct 05, 2021
The Weapons of our Warfare
2 CORINTHIANS 10:1-4
The Weapons of our Warfare:
- Paul approaches the believers of the Corinthians with meekness and gentleness and tells them that he is timid when he is with them and bold when he is far away from them.
Paul says In v2 I beg you that when I come I may not have to be as bold as I expect to be toward some people who think that we live by the standards of this world.
The reason he tells this is because Paul gets angry with the Corinthian believers because they were running after worldly pleasures, walked in the way sinners, and mockers do.
Basically, the Corinthians:
Believed and worshipped in pagan gods,
Offered sacrifices and built temples for these gods,
People were running after fame, pride, money, and sexual immorality.
People were free-thinkers, they developed an attitude that they can do anything they wanted to do.
Criticism against Paul and his teachings was on the rise and also false preachers
The church went through divisions and lacked unity (I Corinthians 3)
The gods of this age has blinded the minds of unbelievers so that they cannot see the light of the gospel of the Glory of Christ, who is the image of God (2 Corinthians 4:4)
Amidst all these practical matters, Paul still chose to approach the believers through gentleness and meekness that Christ has given to him to encourage and motivate them to lead a holy life.
Paul clearly knew that these are the entities that revolve around spiritual warfare that is targeted against the church and the believers from believing and worshiping Jesus Christ.
Paul says in v3-v4, though they belong to this world, the war is not against the flesh of this world (not materialistic) but against the spiritual forces of evil in the heavenly realms (Eph 6:12).
To fight against the kingdom of darkness, worldly weapons are not used and cannot be used, but there are strong weapons that has the divine power to demolish strongholds.
In Ephesians 6, Paul teaches how to overcome the strongholds.
Belt of truth
Breastplate of righteousness
Feet fitted with the readiness that comes along with the gospel of peace
Shield of faith
Helmet of Salvation
Sword of the Spirit
These are the components of the Armor of God, and this can be fully woven when it is interlinked with the word of God, prayer, and faith in the Lord Jesus Christ.
We live in a time where our minds are too preoccupied and busy running after work and looking after our families.
At the same time, we need to be mindful that there is a zone layer of the spiritual warfare around us that targets our heart, soul, mind, and strength.
The enemy often fights to snatch away our prayer time, feeding our minds with negative thoughts by blocking the word of God, sometimes he keeps us too busy in social media without our acknowledge wasting our time from spending time with the Lord.
How are we going to fight against our strongholds?
Be strong in the Lord and in his mighty power and wear on the full armor of God so that you can take your stand against the devil’s schemes (Eph 6:10) and pray in the Spirit on all occasions with all kinds of prayers and requests (Eph 6:18)
Prayer: Dear Lord, help us to fortify our spiritual walls and raise our watchtowers through the word of God, prayer, and faith in the Lord Jesus Christ. Amen
Blessings & Prayers
Pastor. Bobby Leonard

Monday Oct 04, 2021
English Devotion - Binding Satan
Monday Oct 04, 2021
Monday Oct 04, 2021
Binding Satan
It is for freedom that Christ has set us free. Stand firm then, and do not let yourselves be burdened again by a yoke of slavery. (Galatians. 5:1).
The most common cause of spiritual weakness in a Christian or a church is a failure to recognize the flesh in its disguise of being religious but not righteous.
Like Peter flashing a sword in Gethsemane, the fleshly Christian thinks he is doing God's will and fighting God's battles for him.
Christians are told to "resist the devil". Resisting the devil is done by putting on the whole armor of God, as Paul describes it in Ephesians 6.
The "binding and loosing" mentioned in Matthew 18:18 refers to the agreement in the prayer of believers. This is the promise of God revealed in his Word.
Galatians 5:19-21 clearly tells us that lust, hatred, discord, jealousy, rage, envy, sexual orgies, and the like are not the work of demons but of the flesh.
It is impossible to "cast out" the flesh during this lifetime, rather we must recognize its evil character, refusing to yield mind or body to its impulses, and turning immediately to Jesus for the supply of his strength and purity.
Romans 6:13: Do not offer any part of yourself to sin as an instrument of wickedness, but rather offer yourselves to God as those who have been brought from death to life; and offer every part of yourself to him as an instrument of righteousness.
Christians identify the flesh in themselves, by means of the Word of God, and to follow the pattern the Word describes to keep the flesh in subjection to the spirit and the individual is free to live as the Lord has already made provision.
We must understand the root cause of our behavior and discern before we bind the spirit. Many of us live in disguise to fool ourselves declaring that we are under spiritual attack, while we know it is the flesh that we struggle and are unwilling to disclose, let go, or resist it.
We must exercise self-control over the patterns of the world by subjecting ourselves to the spirit.
Those who live according to the flesh have their minds set on what the flesh desires, but those who live in accordance with the Spirit have their minds set on what the Spirit desires. Romans 8:5
If you can bind your disguise, you are binding the plots of satan through the disguise.
Prayer:
Dear Lord, help us to have the heart of discernment to understand our fleshly desires to remove our life in disguise. Help us to be righteous and truthful to you. In Jesus Name. Amen.

Monday Oct 04, 2021
சாத்தானை கட்டுதல்
Monday Oct 04, 2021
Monday Oct 04, 2021
கிறிஸ்து நம்மை விடுதலையாக்குவதற்கே விடுவித்தார். நீங்கள்
மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு
உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்.
(கலாத்தியர். 5: 1).
ஒரு கிறிஸ்தவரோ அல்லது திருச்சபையோ ஆவியில் பலவீனமாய்
இருப்பதற்கு பொதுவான காரணம் நீதியாய் இல்லாமல், பக்தியோடு
இருப்பது போல் தோற்றம் அளிக்கும் மாமிசத்தை அறிந்துகொள்ளாமல்
இருப்பது.
கெத்செமனே பூங்காவிலே பேதுரு தன் பட்டயத்தை உருவினது போல,
மாமிசத்திலுள்ள கிறிஸ்தவர் தான் கர்த்தரின் விருப்பத்தைச்
செய்வதாகவும், யுத்தங்களில் கர்த்தருக்காக சண்டையிடுவதாகவும்
நினைக்கிறார்.
கிறிஸ்தவர்களுக்கு "பிசாசை எதிர்த்து நில் என்று கூறப்பட்டுள்ளது.
தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளவதன் மூலம்
பிசாசை எதிர்த்து நிற்க முடியும் என்று பவுல் எபேசியர் 6 இல்
விவரிக்கிறார்.
மத்தேயு 18:18 இல் குறிப்பிடப்பட்டுள்ள "கட்டுதலும்,
கட்டவிழ்க்கப்படுவதும்" விசுவாசிகளின் ஜெபத்தில்
ஒன்றிணைந்திருப்பதை குறிக்கிறது. இதுவே இந்த வார்த்தையில்
வெளிப்படுத்தப்பட்ட கர்த்தரின் வாக்குறுதியாகும்.
காலாத்தியர் 5: 19-21, விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள்,
வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள்,
மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள்
போன்றவை பிசாசின் வேலை அல்ல, ஆனால் மாம்சத்தின் வேலை
என்று நமக்கு தெளிவாகக் கூறுகிறது.
இந்த வாழ்நாளில் மாம்சத்தை வெளியேற்றுவது சாத்தியமில்லை,
மாறாக அதன் தீய குணத்தை நாம் உணர்ந்து, நமது இருதயம் மற்றும்
சிந்தனையின் தூண்டுதல்களுக்கு இதன் கொடுக்க மறுத்து, இயேசுவின்
பாலிற்காகவும் பரிசுத்தத்திற்காகவும் நாம் திரும்ப வேண்டும்.
ரோமர் 6:13:ல் நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின்
ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை
மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு
ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக
தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.
கர்த்தரின் வார்த்தையின் மூலம் கிறிஸ்தவர்கள் தங்களுடைய
மாம்சத்தை அடையாளம் கண்டு, மேலும் கர்த்தரின் வார்த்தை
விவரிக்கும் முறைபடி மாமிசத்தை ஆவிக்கு கீழ்ப்படுத்தி, தேவன்
ஏற்கனவே ஏற்பாடு செய்துள்ளதால் விடுதலையுடன் ஜீவிக்க முடியும்.
நம் நடத்தையின் மூல காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
மற்றும் நாம் ஆவிகளை கட்டுவதற்கு முன் பகுத்தறிய வேண்டும்.
நம்மில் பலர் ஆவிக்குரிய தாக்குதலுக்கு உள்ளாகிறோம் என்று
நினைத்து நம்மை ஏமாற்றிக்கொண்டு முட்டாள்களாய் வாழ்கிறோம்,
நாம் போராடுவது மாமிசத்துடன் என்று அறிந்தும், அதை
வெளிப்படுத்தவோ, விட்டுவிடவோ அல்லது எதிர்க்கவோ தயாராக
இல்லை.
நாம் ஆவிக்கு கீழ்ப்படிவதன் மூலம் உலகத்தின் முறைபடி
ஜீவிப்பதிலிருந்து நாம் சுய கட்டுப்பாடு உள்ளவர்களாய் இருக்க முடியும்.
மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச்
சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச்
சிந்திக்கிறார்கள். ரோமர் 8: 5
உங்களது மாமிசத்தை நீங்கள் கட்ட முடிந்தால், நீங்கள் அதன் மூலம்
சாத்தானின் சதித்திட்டங்களை கட்டுகிறீர்கள்.
ஜெபிப்போம்:
அன்புள்ள ஆண்டவரே, மாமிசத்தை கிரியைகளை எங்கள்
வாழ்க்கையில் அறிந்து அதை அகற்ற எங்களுக்கு பகுத்தறிவின்
இருதயத்தை தாரும். உமக்காக நீதியாகவும் உண்மையாகவும் இருக்க
எங்களுக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்தில். ஆமென்

Friday Oct 01, 2021

Friday Oct 01, 2021
Tamil Devotion - உங்கள் மதில்களை பலப்படுத்துங்கள்
Friday Oct 01, 2021
Friday Oct 01, 2021
உங்கள் மதில்களை பலப்படுத்துங்கள்
நீதிமொழிகள் 25:28
தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறான். நீதிமொழிகள் 25:28
ஆண்களும் பெண்களும் ஒரு நகரம் போன்றவர்கள். மனிதம் ஒரு நிறுவனம் போல, அதில் அமைப்புகள் மற்றும் துணை அமைப்புகள் உள்ளன, அவை வாழ்க்கை தொடர திறமையாக செயல்பட வேண்டும். இந்த அமைப்புகளில் எல்லைகளும் அடங்கும். அவை உடையும் பொழுது சிக்கல்கள் உருவாகின்றன.
ஒரு நகரமோ அல்லது பாதுகாப்பற்ற ஒரு நபரோ ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் எதிர்வினை முறையில் இருப்பார்கள். மாம்சத்தின் உணர்வுகளுக்கு எதிராக தங்களை தற்காத்துக் கொள்ள முடியாத ஒரு மனிதனுக்கு அந்த உணர்ச்சிகளின் மீது எந்த அதிகாரமும் இருக்காது மற்றும் மாம்சத்தின்படியே செய்வார்.
நம் ஆவியை நம்மால் ஆள முடியாவிட்டால், நமக்கு மிகவும் பிரியமான காரியங்களை செய்வதும், பிரியமான நபர்கள் சொல்லுவதும் நம்மை அதிமாக பாதிக்கும். இதுபோன்ற செயல்களால் நாம் ஏற்கனவே சேதமடைந்திருக்கலாம். சரியானதைச் செய்ய மட்டுமே நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் கற்றுக்கொள்வது நமது ஞானம்.
ஒரு ஞானவான் தனது மனசாட்சி மற்றும் மனதின் மூலம் தனது ஆவியை ஆளுகிறார். லட்சியம், கோபம், காமம், பெருமை அல்லது பழிவாங்குவதல் போன்ற உணர்வுகளை தடுக்க அவர் தன்னை வெறுத்து, சங்கிலிகளால் தன்னை பூட்டுகிறார்.
அவர் மனதிலே உறுதி கொண்டு மரியாதை, பணிவு, நீதி மற்றும் நல்லொழுக்கம் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க தன்னை வழிநடத்துகிறார்.
அவர் தனது எண்ணங்கள், ஆசைகள், மனச்சோர்வு, மனக்கசப்புகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துகிறார்.
ஒரு முட்டாள் தன் ஆவியின் தூண்டுதல்களை எதிர்க்க மாட்டார். அவர் தனது ஆவி அவரை வழிநடத்த அனுமதிக்கிறார்; அவர் தெய்வீகதன்மையையும், நல்ல சுபாவத்தை வளர்க்கும் போராடுவதையும் இழக்கிறார். அவர் செய்யக்கூடாததை அவரால் நிறுத்த முடியாது.
அவர்கள் ஒருபோதும் வளர்வதில்லை, ஏனென்றால் அவர்கள் சிதைந்த இருதயத்தை கொண்ட குழந்தைத்தனமான உணர்ச்சிகளால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள்.
சாலமோனின் நாட்களிலே, ஒரு நகரம் வலுவான கோட்டைகள், வாசல்கள் மற்றும் அதைச் சுற்றி உள்ள பெரிய சுவர்களை சார்ந்து இருந்தன.
தடுப்புகள், வாயில்கள் அல்லது கோபுரங்கள் உடைக்கப்பட்டு சுவர்கள் அகற்றப்பட்டால், ஒரு நகரம் அதை கொள்ளையடிக்க அல்லது வெல்ல விரும்பும் எந்தவொரு எதிரியின் ஊடுருவலுக்கும் முற்றிலும் வெளிப்படும்.
இந்த பாதுகாப்பு வழிமுறைகளில் ஒரு நகரம் போதுமான அளவு முதலீடு செய்யவில்லை என்றால், அதை எளிதாக கைப்பற்ற முடியும்.
தனது ஆவியை அடக்காத ஒரு மனிதன் பாதுகாப்பற்ற பாதிக்கப்படக்கூடியத நகரம் போல இருக்கிறான். அவரது ஆவி சிறிய தூண்டுதலுக்கு கூட பாவம் செய்யத் தயாராக உள்ளது, மேலும் அவர் தனது ஆவியை நிலைப்படுத்தவோ பலம் கொள்ளவோ முடிவதில்லை. அவர் ஆதரவற்றவராக, நம்பிக்கையற்றவராக, நிரந்தரமாக தனது எதிரிகளின் தயவில் இருக்கிறார்.
முதிர்ச்சியின் அடையாளம் தன்னை அடக்குவது. ஒருவரின் சொந்த பலத்தில் இதைச் செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
ஆனால் ஆவியின் உதவியுடன், கிறிஸ்துவில் தரித்திருந்து தன் மனம் மற்றும் சரீரம் வழிநடத்த படுவதை நேசிப்பவர் ஒரு பாதுகாப்பான நகரத்தைச் சுற்றியுள்ள சுவர்களைப் போல வலுவான பலமுள்ள முதிர்ச்சியைக் கொண்டிருப்பார்.
இயேசு கிறிஸ்து தனது ஆவியை அடக்கி தனது பிதாவின் விருப்பத்திற்கு அடிபணிந்தார். பல்வேறு சமயங்களில் பிசாசினால் சோதிக்கப்பட்டாலும், அவர் பிசாசின் ஆலோசனைகளை ஒருபோதும் கருத்தில் கொள்ளவில்லை (மத் 4: 1-11).
நாம் அவரிடம் கேட்கும்போது, அவர் தனது கிருபையையும் பலத்தையும் கேட்பவர்களுக்கு அளிப்பார். பிலிப்பியர் 4:13 கூறுகிறது, என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.
நீங்கள் கட்டுப்பாட்டை எடுத்து ஒரு பாதுகாப்பை உயர்த்தாவிட்டால் உங்கள் வாழ்க்கை சூறையாடப்பட்டு வீணாகிவிடும். நீங்கள் ஒருபோதும் பெறுக மாட்டீர்கள். நீங்கள் ஒதுக்கப்பட்டவராக இருப்பீர்கள், ஏனென்றால் கட்டுக்கடங்காத ஆவி கர்த்தருக்கோ மனிதனுக்கோ நல்ல விஷயங்களை உருவாக்குவதில்லை.
நீங்கள் பாவம் செய்கின்றவர்களாகவும், விடுபட்ட பாவங்களிலும் மூழ்குவீர்கள். உங்கள் மதில்களை கட்டியெழுப்புகள்! உங்கள் கோபுரங்களை உயர்த்துங்கள்! உங்கள் வாசல்களை அடையுங்கள்! சுவர்களை எழுப்புங்கள்! பரிசுத்த ஆவியானவர் உங்கள் ஆவியை ஆளட்டும்!
நாம் பிரார்த்தனை செய்வோம்:
ஆண்டவரே, இன்று என் ஆவியை உம்மிடம் ஒப்படைக்கிறேன், என் ஆவியின் மீது வெற்றியைக் காண்பேன் என்று அறிக்கையிடுகிறேன். யுத்தம் கர்த்தருடையது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். உம் நாமம் வலிமையானது மகத்துவமானது, நான் உம்மிடம் முற்றிலும் ஒப்புக்கொடுக்கிறேன். நீர் அதை எடுத்து நன்மையானதாக மாற்றும். இயேசுவின் நாமத்தில். ஆமென்.

Friday Oct 01, 2021
Fortify Devotion
Friday Oct 01, 2021
Friday Oct 01, 2021
Proverbs 25:28 - Fortify your Walls
Like a city whose walls are broken through is a person who lacks self-control. Proverbs 25:28
The man or woman is like a city. A human is an entity in which there are systems and subsystems that must work efficiently for life to continue. Where these systems, also include the boundaries around the entity itself. Break down, there is trouble.
A city or a person unprotected will be in reaction mode every minute of every day. A human who cannot defend themselves against the passions of the flesh will have no power over those passions and will do according to the flesh.
If we cannot rule our spirit, we are vulnerable to say or do things that could cost us dearly. We may already have be damaged by such actions. It is our wisdom to learn how to control and manage our feelings to only do what is right.
A wise man rules his spirit by his conscience and mind. He locks it down with chains of self-denial to keep ambition, anger, lust, pride, or revenge from breaking forth.
He guides it by a mental commitment to hold fast honor, humility, righteousness, and virtue.
He rules his thoughts, his desires, his inclinations, his resentments, and keeps them all in disciplined order.
A fool does not resist impulses from his spirit. He lets his spirit direct him; he forfeits the fight for character and godliness. He cannot stop doing what he should not.
They never grow up, for they are controlled by childish passions of a depraved heart.
In Solomon’s time, a city depended on strong fortifications and gates, with great walls surrounding it.
If the barricades, gates, or towers were broken down and the walls taken away, a city was totally exposed to the intrusions of any enemy that wished to plunder or conquer it.
If a city did not invest sufficiently in these means of protection, it could easily be captured.
A man without a rule of his spirit is exposed and vulnerable like a defenseless city. His spirit is ready to sin with very little provocation, and he cannot marshal it or power it for any real good. He is helplessly, hopelessly, perpetually at the mercy of his enemies
The mark of maturity is control of the self. This is nearly impossible to do in one’s own strength. But with the Spirit’s help, the one who abides in Christ and loves the stewardship of the mind and body will have a maturity that is as strong and powerful as walls around a secure city.
Jesus Christ ruled His spirit and submitted to God’s will. Though tempted by the devil at various times, He never considered the devil’s suggestions (Matt 4:1-11).
when we ask, He will provide grace and strength for those who ask. Philippians 4:13 says I can do all things through Christ which strengthens me.
Your life will be plundered and wasted unless you take control and raise a defense. You will never amount to much. You will be a castaway, for an unruly spirit does not produce good things for God or man. You will plunge into sins of commission and omission. Built your barricades! Raise the towers! Close the gates! Build the walls! Let the Holy Spirit rule your spirit!
Let us Pray:
Lord, I surrender my spirit to you today, I declare that I will see victory over my spirit. I understand that the battle belongs to you lord. Your name is powerful and mighty and to you, I surrender completely. You take it and turn it to good. In Jesus Name. Amen.