Episodes
Wednesday Sep 15, 2021
Tamil Devotion - வழிகளுக்கு இடையே
Wednesday Sep 15, 2021
Wednesday Sep 15, 2021
1 சாமுவேல் 14: 1-15
வழிகளுக்கு இடையே
யோனத்தான் சவுலின் மகன் ஆனால் அவர்கள் இருவருக்கும்
இடையிலான தொடர்பு நீங்கள் எதிர்பார்ப்பது போல ஒரு தந்தை மற்றும்
மகனுக்கு இடையே இருந்தது போல் இல்லை.
பெலிஸ்தர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையே ஏற்பட்ட
மோதலில் அவர் சோர்வடைந்தார்.
எனவே, சவுல் தனது 600 நூறு பேருடன் ஒரு மாதுளை மரத்தின் கீழ்
ஓய்வெடுத்தபோது, யோனத்தான் புறப்பட்டுச் சென்றார், அவர் எங்கு
செல்கிறார் என்று தனது தந்தை சவுலிடம் சொல்லவில்லை.
யோனத்தான் தன் ஆயுததாரியுடன் சேர்ந்து ஒரு தைரியமான நகர்வை
மேற்கொண்டார், அவருடைய திட்டம் கர்த்தரைச் சார்ந்து இருந்தது.
யோனத்தான் மனிதனின் மீது கவனம் செலுத்தவில்லை, அவருடைய
தந்தை செய்ததைப் போலவும், தொடர்ந்து செய்வதைப்போலவும்
இல்லாமல் அவருடைய கவனம் கர்த்தரிடமே இருந்தது.
அவரது ஆயுததாரியின் எதிரே இருந்தவர்கள் அதிக எண்ணிக்கையில்
இருந்தாலும், இராணுவத் தொழில்நுட்பத்தில் பெரிதும்
மிஞ்சியிருந்தாலும், அவர் லேவியராகமம் 26: 8 ல் சொல்லப்பட்ட
வாக்குத்தத்தை போல தன்னை வலுப்படுத்திக் கொண்டார். உங்களில்
ஐந்துபேர் நூறுபேரைத் துரத்துவார்கள்; உங்களில் நூறுபேர்
பதினாயிரம்பேரைத் துரத்துவார்கள்; உங்கள் சத்துருக்கள் உங்களுக்கு
முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.
யோனத்தான் பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போகும் வழி நடுவே,
இரண்டு பக்கமும் ஒரு செங்குத்தான பாறையை கண்டு அதன் இடையே
இருந்த இடுக்கமான வழியில் பெரிய எண்ணிக்கைக்கு எதிராக சில
ஆண்கள் மட்டுமே எளிதில் போராட முடியும் என்ற உத்தியை கண்டார்.
யோனத்தானை பொறுத்தவரை, இது ஒரு சாரணர் பயணத்தை விட
கடினமானது. கர்த்தரை முழுவதும் நம்பின இரண்டு பேரை கொண்டு
அவர் என்ன செய்ய முடியும் என்பதை யோனத்தான் பார்க்க
விரும்பினார்.
கர்த்தரை தடைசெய்வது நம்முடைய அவிசுவாசம் மட்டுமே என்று
அவர் அறிந்திருந்தார், மத்தேயு 13:58 , கர்த்தருடைய வல்லமை
குறைவுள்ளது அல்ல ஆனால் ஜனங்களின் அவிசுவாசத்தினார் அவர்
அற்புதங்களை செய்யவில்லை என்று காண்கிறோம்.
யோனத்தானுடைய ஆயுததாரி அவனிடம், ‘உம்முடைய மனதுக்கு
ஏற்றபடி நானும் உம்மோடேகூட வருகிறேன்' என்று சொல்லுவது,
கர்த்தர் பயன்படுத்தும் ஒரு மனிதனை காட்டுகிறது. கர்த்தர் எப்போதும்
அவர் பயன்படுத்தும் மனிதனைச் சுற்றியுள்ள மற்றவர்கள் அவனை
ஆதரிக்கவும் அவனுக்கு உதவவும் அழைக்கிறார், ஏனென்றால் அவர்
பயன்படுத்தும் அந்த மனிதனைப் போலவே அந்த மற்றவர்களும்
கர்த்தரின் வேலையைச் செய்வதில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.
நியாயாதிபதிகள் 6: 36-40 இல், கிதியோன் தன்னை வழிநடத்த கர்த்தரின்
உறுதியான வார்த்தையைக் கொண்டிருந்தார், ஆனாலும் அவர்
கர்த்தரின் வார்த்தையை சந்தேகித்தார், ஆனால் யோனத்தானோ
கர்த்தரின் வார்த்தையை சந்தேகிக்கவில்லை.
அவர் அந்த நேரத்தில் அவர் என்ன செய்ய வேண்டுமோ அதை
செய்வதற்கு தயாராக இருந்தார், மேலும் கர்த்தர் திட்டமிட
ஒப்புக்கொடுத்தார். விசுவாசம் என்பது கர்த்தர் முழுத் திட்டத்தை வரைய
ஒப்புக்கொடுத்து, நாம் அந்நேரத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதை
செய்வது.
யுத்தம் கர்த்தருடையது என்று யோனத்தானுக்குத் தெரியும், ஆனால்
கர்த்தர் அவரை யுத்தத்த்திற்கு பயன்படுத்துவார் என்று அவருக்குத்
தெரியும், அவர் தனது பட்டயத்தைக் கீழே போடாமல், கர்த்தர்
அவர்களை கீழ விழத்தள்ள வேண்டும் என்று ஜெபிக்காமல், தன்
பட்டயம் கூர்மையாக உள்ளது என்று உறுதி செய்து, அவர்கள்
அனைவரையும் நொறுக்க கர்த்தர் தன்னை பயன்படுத்துவார் என்று
விசுவாசித்தார்.
பெலிஸ்தியர்கள் தங்களுக்குள்ளாக எதிர்த்து நிற்பதற்கும் அதிகமாய்
கர்த்தரால் செய்ய கூடும், இஸ்ரவேலர்களிடத்தில் பட்டயம்
இல்லையென்றாலும், பெலிஸ்தியர்களின் பட்டயத்தை கொண்டு
பெலிஸ்தியர்களுக்கு எதிராக கர்த்தர் பயன்படுத்த முடியும்.
யோனத்தான் தனது இருதயத்தையும் பட்டயத்தையும்
பயன்படுத்தினார், ஆனால் அவரால் செய்ய முடியாததை கர்த்தர்
செய்தார். பெலிஸ்தியர்கள் திகில் அடையும்படிக்கு பூமியும் அதிர்ந்தது.
அது தேவனால் உண்டான பயங்கரமாயிருந்தது.
பெரும்பாலும், நம்மால் என்ன செய்ய முடியுமோ அதை கர்த்தர் செய்ய
நாம் காத்திருக்கிறோம். ஆனால் நம்மால் என்ன செய்ய முடியுமோ நாம்
அதைச் செய்தால் கர்த்தர் அவரால் மட்டுமே செய்ய முடிந்த
அற்புதங்களைச் செய்வார்.
கர்த்தரை தேடுங்கள், அவருடைய வார்த்தையைப் தியானியுங்கள்,
ஜெபம் செயுங்கள், கர்த்தராகிய இயேசுவின் சீஷராக அவரை
பின்தொடருங்கள்.
ஜெபிப்போம்:
பரலோகத் தந்தையே, இஸ்ரவேல் ஜனங்கள் மற்றும் ராஜாக்களின்
வரலாற்றிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்ளக்கூடிய பல பாடங்களுக்கு
நன்றி. உம் குரலைக் கேட்கவும், உம் வார்த்தைக்குச் செவிசாய்க்கவும்
எங்களுக்கு உதவுங்கள். ஏனென்றால், எண்ணம், சொல், செயல் மற்றும்
நோக்கத்தில் உம்மை காணப்படுத்துவது உம்முடைய விருப்பம்.
நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்.
Comments (0)
To leave or reply to comments, please download free Podbean or
No Comments
To leave or reply to comments,
please download free Podbean App.