Episodes
Monday Sep 20, 2021
Tamil Devotion - பல்வேறு வகையான மக்கள்
Monday Sep 20, 2021
Monday Sep 20, 2021
சாட்சியாய் இருத்தல் - தொடர்
பல்வேறு வகையான மக்கள்
அப்போஸ்தலர் 1: 8
பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா
முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்
என்றார்.
இயேசு தனது சீஷர்களை கலிலேயா மலையில் கூட செய்து, அவர்களிடம் இந்த தீர்க்கதரிசன
வாக்கியத்தை கூறினார், இது தேவன் மீண்டும் பரலோகத்திற்கு செல்வதற்கு முன்பதாக
நடக்கவிருப்பது.
அவருடைய விருப்பம், திட்டம் மற்றும் நோக்கம், நாம் அவருடைய சாட்சிகளாக இருப்பது.
அவருக்கு சாட்சியாக இருப்பது என்பது, கர்த்தர் நம் வாழ்க்கையில் செய்ததை பகிர்ந்து
கொள்வதாகும்.
சாட்சியாய் இருப்பது என்பது கிறிஸ்துவைப் பற்றி பிறரிடம் பேசுவது, அவர் உங்களுக்காகவும்
இந்த முழு பூமிகாகவும் என்ன செய்தார் என்பதை கூறுவது, இன்று உலகம் ஏன்
தொலைந்துபோன உலகம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள உதவுவது.
கர்த்தரை நம்பி அவரை விசுவாசிப்பதன் மூலமே அவர்களின் சிந்தனை மற்றும் ஒழுக்கத்தை
மாற்ற முடியும் என்பதை உலகிற்கு புரிய வைப்பது.
நமது நியாயமான தர்க்கமோ நமது வாதங்களோ இதில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது
என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நமக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியின் வெளிப்பாடாக அது இருக்க வேண்டும்.
அவர் தனது வேலையைச் செய்கிறார். அவருடைய வேலையைச் செய்ய அவரைச் சார்ந்து
சூழ்நிலைக்கு பதிலளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.
பரிசுத்த ஆவியானவர் அவர்களை தயார்படுத்துகிறார்.
அவர் தனது வேலையைச் செய்திகொண்டிருக்கிறார்.
தேவன் அவர்களை ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறார். நம்மைச் சுற்றிலும் இருக்கும்
எல்லோரையும் அவர் தயார் செய்கிறார்.
இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை
ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவான் 4:35
இந்த ஆயத்தப்படுத்தப்பட்ட, தாக்கமுள்ள இதயங்கள், பதில்களுக்காக ஏங்கும் இதயங்கள்,
நம்மைச் சுற்றிலும் உள்ளன.
நமது வேலை வெறுமனே தேவனுக்காக தயாராக இருப்பது. நாம் நாளுக்கு நாள் அவர்களை
தொடர்பு கொள்ளும்போது, அவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து நமது சாட்சியை
முன்னோக்கி எடுத்துச் செல்ல தேவனுக்காக நான் பயன்படுத்தபட முடியும்.
பல்வேறு வகையான மக்கள் நம்மிடம் ஓடி வர கூடும், பரிசுத்த ஆவியானவர் உங்களை
வழிநடத்த அனுமதிக்க வேண்டும், கிறிஸ்துவைப் பற்றி அவர்களுக்குச் சொல்லத் தயாராக
இருங்கள், ஏனென்றால் உங்களது சாட்சிகள் அனைத்தும் கிறிஸ்துவைப் பற்றியது.
நாம் அலட்சிய போக்குடையவர்கள், சந்தேகம் கொண்டவர்கள், நாத்திகர்கள், ஒழுக்க ரீதியாக
பிரச்சனைகள் உடையவர்கள், வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்கள், நம்பிக்கையின்றி
வாழ்பவர்கள் என்று பலரை சந்திக்கலாம்.
பரிசுத்த ஆவியானவரால் ஒரு அலட்சிய போக்குடையவரை அவரிடம் கொண்டு வர முடியும்.
நீதியுள்ள கிறிஸ்துவை அவர்கள் காண நாம் அவர்களுக்கு உதவ வேண்டும்.
இந்த உலகத்தின் ஆள்பவன் நியாயம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளான் என்பதை அவர்கள்
புரிந்துகொள்ள நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். பிசாசு ஏற்கனவே தோற்கடிக்கப்பட்ட
எதிரி.
மேலும் எல்லோருக்கும் விடுவிப்பு, விடுதலை மற்றும் விடுவிக்கின்ற வார்த்தை உண்டு.
நாம் எதை பேசினாலும், யாரிடம் பேசினாலும், அதற்கு கிறிஸ்து தான் பதில்.
சாட்சி என்பது தன்னை பற்றியது அல்ல, கிறிஸ்து உங்களுக்காக என்ன செய்தார் என்று
சொல்லுவது.
ஜெபிப்போம்:
பரலோகத் தகப்பனே, நாங்கள் உம்மை புகழ்கிறோம். எங்களிடையே பரிசுத்த ஆவியானவரின்
வேலையை நம்பி சாட்சியாய் இருப்பதற்கு நாங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று உணர,
மக்களின் வாழ்வில் கிறிஸ்துவை கொண்டு வர எங்களுக்கு உதவுங்கள். உங்கள் பாத்திரமாக
இருக்க எங்களுக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்தில். ஆமென்
Comments (0)
To leave or reply to comments, please download free Podbean or
No Comments
To leave or reply to comments,
please download free Podbean App.