Episodes
Friday Sep 24, 2021
Tamil Devotion - நம்பிக்கையற்றவர்களுக்கு நம்பிக்கை
Friday Sep 24, 2021
Friday Sep 24, 2021
நம்பிக்கையற்றவர்களுக்கு நம்பிக்கை
யோவான் 5: 1-16
பெதஸ்தாவில் உள்ள குளத்தில் ஒரு மனிதன் பலவீனமாகவும், நிற்க
முடியாமலும், 38 ஆண்டுகளாக நடக்க முடியாமலும் இருந்தார்.
அங்கே முடவர்கள், பார்வையற்றவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள்
என்று ஒரு பெரும் கூட்டம் இருந்தது அனைவரும் தண்ணீர்
கலங்குவதற்காக காத்திருந்தனர். அந்தக் கூட்டத்தில் இருந்து, இயேசு
ஒரு மனிதனைத் தேர்ந்தெடுத்தார்.
அவர் அங்கிருந்த ஐந்து மண்டபங்களில் உள்ள எல்லோரையும்
குணமாகவில்லை.
அவர் அனைவரையும் கீழே வரவைத்து அவர்கள் மீது கை வைத்து
அற்புதங்கள் செய்யவில்லை.
அவர் ஒரே ஒரு மனிதரிடம் சென்றார்.
மனிதனின் உதவியற்ற தன்மையையும் பலவீனத்தையும் கர்த்தர்
எவ்வாறு சந்திக்கிறார் என்பதை இது நமக்குக் காட்டுகிறது.
சந்தேகமில்லாமல் இந்த மனிதனின் உதவியற்ற தன்மையே
இயேசுவை அவரிடம் ஈர்த்தது.
நாம் அனைவரும், ஒரு வகையில், உதவிற்று, பலவீனமாக, ஊனமுற்று,
பெதஸ்தா குளத்தில் இருப்பதை காணலாம். நம் அனைவருக்கும் உதவி
தேவை.
நாம் அனைவரும் சில சமயங்களில் தேவையானவற்றை செய்ய
முடியாமல் முடங்கிநிற்கிறோம். நாங்கள் நடக்க முடியாமல்
இருப்பதைக் காண்கிறோம்: நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம்
நன்றாக நடக்கவில்லை.
குணமடைய விரும்பாத பலர் இன்று உள்ளனர்.
அவர்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு தேவனின் உதவியைப் பெற
விரும்பவில்லை.
அவர்கள் தங்கள் பலவீனத்திலிருந்து விடுதலை தரும் உதவியை
விரும்பவில்லை.
அவர்கள் தங்கள் பலவீனம் மற்றும் உதவியற்ற தன்மையை
விரும்புகிறார்கள்.
அவர்கள் எப்போதும் தங்கள் உதவியற்ற தன்மையின் மூலம்
மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறார்கள்.
இயேசு அவனை நோக்கி, சொஸ்தமாகவேண்டுமென்று
விரும்புகிறாயா? என்று கேட்டார். அதற்கு வியாதிஸ்தன், நான்
சொஸ்தமாக விரும்புகிறேன் ஆனால் தண்ணீர் கலக்கப்படும்போது
என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை,
நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி
இறங்கிவிடுகிறான் என்றான். நான் முயற்சித்தேன், எனக்குத் தெரிந்த
அனைத்தையும் செய்துவிட்டேன்.
நான் அந்த நீரில் இறங்க விரும்புகிறேன், நான் குணமடைய
விரும்புகிறேன், ஆனால் எனக்கு திறன் இல்லை.
எனக்கு உதவ யாரும் இல்லை. நான் முயற்சியை விட்டுவிட்டேன்.
எனக்கு நம்பிக்கை இல்லை.
தங்கள் சூழ்நிலையிலே தனது நம்பிக்கையை இழந்தவர்கள்
இருக்கிறார்கள், நம்பிக்கை இல்லாததினால் அதைச் செய்து மாற்ற
முடியும் என்று நம்ப மறுக்கிறார்கள்.
அவர்கள் மனித கண்ணோட்டத்தில் எந்த வழியையும் காணவில்லை,
எனவே தங்கள் வாழ்நாள் முழுவதும் தோல்வியடைந்து, பலவீனமாக
இருப்பதற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் உங்கள் திருமணத்திற்கான எந்த
நம்பிக்கையையும் நீங்கள் காணாமல் போகலாம். நீங்கள் அதை
சரிசெய்ய முயற்சித்தீர்கள்.
நீங்கள் உதவி கேட்டீர்கள் ஆனால் யாரும் கவலைப்படவில்லை; அது
இன்னும் மோசமானது.
இந்த மனிதன் இருந்ததை போல பலர் உதவியற்ற மற்றும் எந்த
மாற்றத்தையும் செய்யமுடியாத நம்பிக்கையின்மையில்
இருக்கிறார்கள்.
இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு
நட என்றார்.
முதலில், அவர் அவனால் முடியாத ஒரு விஷயத்தைக் சொன்னார்;
இரண்டாவதாக, அவன் மீண்டும் முடமாவுதற்கான அனைத்து
சாத்தியங்களையும் நீக்குகிறார்; மூன்றாவதாக, அவன் தொடர்ந்து
வெற்றியில் நடக்க எதிர்பார்க்கிறார். இவை அனைத்தும் வார்த்தைகளில்
நடந்தன.
கர்த்தர் எப்பொழுதும் நாம் நம்புவதற்கும், செய்வதற்கும்,
செயல்படுவதற்கும் ஒன்றை கூறுகிறார்.
இது ஒரு செயலுக்கான வார்த்தை.
இயேசு உங்கள் மனதில் நம்பிக்கையை வளர்க்க முயற்சி செய்யுங்கள்,
உங்கள் எண்ணங்களை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள் என்று
சொல்லவில்லை.
இயேசு, எழுந்திரு! நட, திரும்பி பார்க்காதே என்று கூறுகிறார்.
இப்போது அந்த மனிதன் ஓய்வுநாள் பண்டிகையின் கட்டுப்பாடுகளால்
சிக்கலில் இருக்கிறான். எவ்வாறு எனில், ஓய்வுநாளின் போது எந்த
விதமான சுமையையும் சுமப்பது கூடாதது.
அங்குள்ள மதத் தலைவர்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற
எண்ணத்தைக் கொண்டிருந்தனர், ஆனால் கர்த்தரின் இரக்கத்தை பற்றி
முற்றிலும் அக்கறையற்றவர்களாய் இருந்தார்கள்.
அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டார். அந்த
மனிதன் தேவாலயத்திற்கு சென்றான், ஏனென்றால் குணப்படுத்தப்பட்ட
ஒருவர் நன்றிக்கடன் கொடுக்க வேண்டும் என்று நியாயப்பிரமாணம்
உள்ளது.
அவன் எங்கு இருப்பான் என்று இயேசு அறிந்திருந்தார். நீ
சொஸ்தமானாய் என்றார்.
உண்மை என்னவென்றால், அவன் சரீரத்தில் குணமடைந்தது
மட்டுமல்லாமல், அவன் ஆவியில் குணமடைந்துள்ளான்.
அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன; அவன் கழுவப்பட்டான்,
அவர் பரிசுத்தமாக்கப்பட்டான்.
அவன் சரீரத்திலும், ஆவியில், ஆத்துமாவிலும் ஒரு புதிய
மனிதனானான்.
கர்த்தரிடமிருந்து முழுமையின் பரிசைப் பெற்ற அந்த நபருக்கு, எந்தப்
தகுதியும் இல்லாமல் மற்றும் தனது பங்கில் ஒன்றும் செய்யவிலை.
இதுவே நற்செய்தி, இதையே நீங்களும் நானும்
நம்பிக்கையற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.
அவர்கள் இயேசுவிடம் வரும்போது, அவர்கள் முழுமையடைவார்கள்.
ஜெபிப்போம்:
அன்புள்ள ஆண்டவரே, நாங்கள் சுய பரிதாபம் கொள்ளாமல் எழுந்து
நடக்க உதவுங்கள். நம்பிக்கையற்றவர்களுக்கு நம்பிக்கையை அளிக்க
எங்களுக்கு உதவுங்கள், நீர் எங்களை மீண்டும் முழுமையாக
ஜெபிக்கிறோம். இயேசுவின் நாமத்தில். ஆமென்
Comments (0)
To leave or reply to comments, please download free Podbean or
No Comments
To leave or reply to comments,
please download free Podbean App.