Episodes
Tuesday Sep 21, 2021
Tamil Devotion - இயேசுவும் ஒரு அறிவார்ந்த மனிதனும்
Tuesday Sep 21, 2021
Tuesday Sep 21, 2021
இயேசுவும் ஒரு அறிவார்ந்த மனிதனும்
யோவான் 2: 23-3: 15
இயேசுவின் அற்புதங்கள் மற்றும் அடையாளங்கலால் ஈர்க்கப்பட்டவர்களில் நிக்கொதேமுவும்
ஒருவர் (யோ 2:23), அவர்
யூதருக்குள்ளே அதிகாரியாக இருந்தார்.
அவர் பக்தியுள்ள, படித்த, செல்வாக்கு மிக்கவர், ஆனாலும் இராக்காலத்திலே வருவதற்கு
மிகவும் ஆர்வமாக இருந்தார்.
நிக்கொதேமு அனைத்து மனிதர்களின் பிரதிநிதியாக இயேசுவிடம் வந்தார் (யோ 2: 23-25),
ஒரு வகையில் அவர் மனிதர்களில் உயர்ந்த மற்றும் சிறந்ததை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
இயேசு நிக்கொதேமுக்கு ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக்
காணமாட்டான் என்று பதிலளித்தார்.
இது யூத அனுமானமாகிய, அவர்களின் இன அடையாளம் மற்றும் அவர்களின் பிறப்பு
கர்த்தரின் ராஜ்யத்தில் அவர்களுக்கு ஒரு இடத்தை உறுதி செய்கிறது என்பதை தகர்த்தது.
ஒரு மனிதனின் முதல் பிறப்பு அவருக்கு ராஜ்யத்தைப் பற்றி உறுதியளிக்கவில்லை என்பதை
இயேசு தெளிவுபடுத்தினார்; மறுபடியும் பிறப்பது மட்டுமே இந்த உத்தரவாதத்தை
அளிக்கிறது.
நெறிமுறையிலோ அல்லது மத சீர்திருத்தமமோ போதாது. ஒருவர் மீண்டும் பிறக்க வேண்டும்.
கர்த்தரின் ஆவியால் தீவிர மாற்றமடைய ஒருவர் தண்ணீராலும் ஆவியாலும் பிறந்திருக்க
வேண்டும்.
ஆவியின் புதிய பிறப்பு இல்லாமல், மாமிசம் நீதியின் அனைத்து செயல்களையும்
களங்கப்படுத்துகிறது. ஆயினும், ஆவியால் வழிநடத்தப்படும் மனிதன் செய்யும் அனைத்தும்
கர்த்தரை பிரியப்படுத்தும்.
நிக்கொதேமு குழப்பமடைந்தார். அவர் தனது சிந்தனையில் புதிய பிறப்பு ஏற்கனவே அவருக்கு
மற்றும் அனைத்து உண்மையுள்ள இஸ்ரேலுக்கும் நடந்தது என்று மிகவும் உறுதியாக
இருந்தார். அவருக்கு இயேசு சொன்ன சிந்தனையை புரிந்த கொள்ள கடினமாக இருந்தார்.
இயேசு தொடர்ந்து விளக்க வேண்டியிருந்தது.
நிக்கொதேமு புதிய பிறப்பை அனுபவிப்பதற்கு முன்பு அதைக்குறித்து எல்லாவற்றையும்
புரிந்து கொள்ள வேண்டியதில்லை என்று அவர் அறிந்து கொள்ள இயேசு விரும்பினார்.
இயேசு ஒரு குறிப்பிடத்தக்க அறிக்கையை வெளியிட்டார், எண் 21: 4-9 ல் குறிப்பிட்டுள்ள
கொள்ளிவாய்ச் சர்ப்பமானது மேசியா மற்றும் அவரது வேலையின் சித்தரிப்பு என்று
விளக்கினார்.
சர்ப்பங்கள் பெரும்பாலும் வேதாகமத்தில் தீமையானவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன
(ஆதியாகமம் 3: 1-5 மற்றும் வெளிப்படுத்தல் 12: 9). இருப்பினும், எண்ணாகமம் 21 ல்
சொல்லப்பட்ட சர்ப்பம் வெண்கலத்தால் ஆனது. வெண்கலம் என்பது வேதத்தில்
நியாயர்ப்புடன் தொடர்புடைய ஒரு உலோகம்.
ஒரு வெண்கல சர்ப்பம் பாவத்தைப் குறிக்கிறது, ஆனால் நியாயம்தீர்க்கப்பட்ட பாவம்.
அதே போல, எந்த பாவமும் அறியாத இயேசு சிலுவையில் நமக்கு பாவமானார், மேலும்
நம்முடைய பாவம் அவரால் தீர்ப்பளிக்கப்பட்டது. வெண்கல சர்ப்பம் என்பது கையாளப்பட்ட,
நியாயம்தீர்க்கப்பட்ட பாவம்.
இயேசு நம் பாவங்களைச் சுமந்தாலும், அவர் ஒருபோதும் பாவியாகவில்லை. அவர் நமக்கு
பாவமாக மாறினதும் கூட ஒரு பரிசுத்தமான, நீதியான, அன்பின் செயலாகும். சிலுவையின்
முழு சோதனையிலும் இயேசு பரிசுத்தராக இருந்தார்.
நம்மை இரட்சிக்க அவர் மரிக்க வேண்டும், நம்மை நேசித்தால் அவர் நம்மை இரட்சிக்கிறார்.
"உயர்த்தப்பட்டு" என்கிற வாக்கியம் இயேசு சிலுவையில் அறையப்படுதல் (யோ 12:32)
மற்றும் அவர் பரலோகத்துக்கு ஏறுவது (அப் 2:33) இரண்டையும் விவரிக்கப் பயன்படுகிறது.
இரண்டு அர்த்தங்களும் இதில் உள்ளன, அவருடைய பாடுகளும், அவர் உயர்த்தப்படுவதும்.
இயேசு இரண்டிலும் உயர்த்தப்பட்டார்.
நித்திய ஜீவன் என்பது நீண்ட அல்லது முடிவற்ற வாழ்க்கையை விட அதிகமானது.
நித்திய ஜீவன் என்பது இந்த வாழ்க்கை என்றென்றும் நீடிக்கும் என்று அர்த்தமல்ல.
நிக்கொதேமு கர்த்தரின் ராஜ்யத்தைப் பற்றிய தனது அறிவின் வரம்புகளைப் புரிந்துகொள்ள
உதவுவதில் இயேசு கவனம் செலுத்தினார், ஒருவர் அதை அனுபவிக்காவிட்டால், அவர்கள்
ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
ஜனங்கள் மீண்டும் பிறக்கும் அனுபவத்தை பெறுவதற்கு நாம் ஜெபித்து, வேதத்தை வாசித்து,
வார்த்தையை அவர்களுக்கு விளக்க உதவுவோம்.
ஜெபிப்போம்:
அன்புள்ள ஆண்டவரே, மீண்டும் பிறக்கும் அனுபவத்திற்கு ஜனங்களை வழிநடத்த எங்களுக்கு
உதவுங்கள். வெறும் மாற்றமல்ல ஆனால் அவர்களின் வாழ்க்கையில் உம்மை அனுபவிக்க ஒரு
உண்மையான மாற்றத்தை தாரும். இயேசுவின் நாமத்தில். ஆமென்
Comments (0)
To leave or reply to comments, please download free Podbean or
No Comments
To leave or reply to comments,
please download free Podbean App.