Episodes

Wednesday Oct 20, 2021
Tamil Devvotion - ஆட்டுவாசல்
Wednesday Oct 20, 2021
Wednesday Oct 20, 2021
நெகேமியா 3:1 , 32
ஆட்டுவாசல்
நம் வாழ்க்கையில் திறந்த வாசல்கள் உள்ளன, எதிரிகள் நமக்குள் ஒரு கோட்டையைக் கட்ட நாம் நம்முடைய சில செயல்களின் மூலம் அனுமதிக்கிரோம்.
நாம் நெகேமியாவின் வாசல்கள் வழியாக பயணிக்கையில், நம்மை நாமே ஆராய்ந்து நமது ஆன்மீக சுவர்களை பலப்படுத்துவோம்.
ஒரு நகரத்தின் வாசல்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. இரவில் எதிரிகள் வராமல் வாசல்கள் மூடப்படும். (யோசுவா 2: 5)
சுவரின் குறிப்பிட்ட பகுதிகளில் 42 குழுக்கள் வேலை செய்து கொண்டிருந்தன, ஆசாரியர், தலைவர்கள், கைவினைஞர்கள் மற்றும் பிற நகரங்களைச் சேர்ந்த யூதர்கள் கூட இணைந்து செயல் பட்டனர்
சுவர் சீரமைப்பு பணியில் 10 வாசல்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆட்டு வாசலில் வேலை முதலில் தொடங்கியது.
கட்டப்பட்ட ஒவ்வொரு வாசலுக்கும் அதன் சொந்த நடைமுறை செயல்பாடு உள்ளது.
அதோடு கூட ஒரு ஆன்மீக முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.
ஆட்டு வாசல் இயேசு யார், அவர் நமக்கு என்ன செய்தார் என்பதை நன்கு புரிந்து கொள்ள உதவுகிறது.
ஆட்டு வாசல் மீட்டெடுக்கப்பட்ட முதல் வாசல் ஆகும். மேலும் இது பிரதான ஆசாரியர் மற்றும் அவரது சக ஆசாரியறாலும் சீரமைக்க பட்டது.
இது ஆலயத்திற்கு பாலி செலுத்த ஆடுகளை கொண்டுவரும் வாசல்.
ஆட்டுச் சந்தை மற்றும் ஆட்டுக் குளம் ஆகியவற்றிலிருந்து ஆலயத்திற்கு பாலி செலுத்த நுழைவதற்கான நுழைவாயிலாக இருந்ததால் அது ஆட்டு வாசல் என்று அழைக்கப்பட்டது.
யோவான் 1:26 - 29 இயேசு உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி எனவே ஆடு வாயில் இயேசுவின் தியாகத்தையும், சிலுவையில் இயேசுவின் மரணத்தின் மூலம் நம்மை ரெட்சித்தார் என்பதையும் நினைவூட்டுகிறது.
யோவான் 10- 7-11
இயேசு அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.
நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
அதிகாரத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் ஆட்டு வாசல் குறிப்பிடப்பட்டுள்ளது, எனவே சிலுவையில் இயேசுவின் தியாகம் எல்லாம் துடைக்கமும் முடிவுமாய் இருக்கிறது.
இது இயேசுவைப் பற்றியது மற்றும் சிலுவையில் அவர் எல்லவத்திற்கும் முற்றுப்புள்ளி என்று அருகிரோம்.
இன்று, நாம் வழிபாட்டிற்காக விலங்குகளை பலிகொடுக்க அழைக்கப்படுவதில்லை,
(ரோமர் 12: 1) சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று,
தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
இயேசு ஆட்டு வாசல் வழியாக மலை ஆலயத்திற்குள் நுழைந்தார், மேலும் சிலுவையில் அறையப்படுவதைக் இயேசு சென்ற பாதையான கோல்கோதாவிற்கு ஆட்டு வாசல் வழியாக சென்றார்.
முதலில் நமது வாசல்களை சரிசெய்வது, நமது முன்னுரிமைகளை சரியாக அமைத்து, நம் கவனத்தை கர்த்தரை நோக்கி வைத்துக்கொள்வது முக்கியம்.
இது பிரதான ஆசாரியாரால் கட்டப்பட்டது மற்றும் இயேசு நம் பிரதான ஆசாரியராக இருக்கிறார். அவருடைய மரணம் நமக்கு வழி திறக்கிறது.
நம் வாழ்வில் பாவங்களால் அழிக்கப்பட்ட சுவர்கள் உள்ளன, அவை வழிபாட்டிற்காக நம் வாழ்க்கையை முழுமையாக வழங்குவதற்கு முன் சரிசெய்யப்பட வேண்டும்.
கர்த்தருக்கு சரியான பலியாக நம் வாழ்வை வழங்குவதற்கு முன் இந்த சுவர்கள் முதலில் மீண்டும் கட்டப்பட வேண்டும்.
சிறிது சிந்திக்கலாம், உங்கள் வாழ்க்கையில் என்ன பாவம் உங்களை உங்கள் உடலை கர்த்தருக்கு பலியாக வழங்குவதில் இருந்து தடுக்கிறது மற்றும் நாம் செய்யும் வழிபாடு கர்த்தருக்கு நேர்மையாக இருப்பதை எப்படி உறுதி செய்ய முடியும்.
ஜெபம்
பரலோக பிதாவே , எங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவும், நாங்கள் உங்களுக்காக வாழ கிருபை செய்யும். இரட்சிப்பின் வாசலில் நாங்கள் சுதந்திரமாக நுழைய எங்கள் பாவ வழிகளில் இருந்து எங்களை மீட்டதிற்காக நன்றி.
இயேசு கிறிஸ்த்துவின் நாமத்தில்.ஆமென்.
No comments yet. Be the first to say something!