Episodes
Friday Aug 13, 2021
விரோதத்திலும் மகிழ்ச்சியடைதல்
Friday Aug 13, 2021
Friday Aug 13, 2021
விரோதத்திலும் மகிழ்ச்சியடைதல்
பிலிப்பியர் 1: 15-18
அப்போஸ்தலன் பவுல், கிறிஸ்துவுக்காக ஒரு கைதியாக
இருக்கும்போது நற்செய்தியை பிரசங்கித்தார்.
நற்செய்தி பிலிப்பி பகுதியைச் சுற்றி பிரசங்கிக்கப்படுகிறது என்பதை
அறிந்து அவர் உற்சாகமடைந்து, மேலும் மகிழ்ச்சியடைகிறார்.
ஆனால் அதே சமயத்தில், சிறைச்சாலையின் உள்ளே இருப்பதால்,
பிற இடங்களில் உள்ள மக்களுக்கு எப்படி நற்செய்தி
அறிவிக்கப்படுகிறது என்று அவர் கவலைப்படுகிறார்.
கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் நான்கு குழுக்களை
அவர் வகைப்படுத்துகிறார்:
1. பொறாமையினாலும் விரோதத்தினாலும் பிரசங்கித்தார்கள்
2. நல்லெண்ணத்தினால் பிரசங்கித்தார்கள்
3. இன்னும் சிலர், கர்த்தரின் நற்செய்தியைப் பாதுகாக்க பவுல்
சிறையில் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, அன்பினால்
நற்செய்தியைப் பிரசங்கிதார்கள்
4. சுயநல லட்சியத்திலிருந்து நற்செய்தியைப் பிரசங்கிக்கும்
மற்றவர்கள்
சிலர் பவுலின் ஊழியத்தை மிஞ்சவும் மற்றும் மக்களின் கவனத்தை
பெறவும் பொறாமையால் கிறிஸ்துவின் வார்த்தையைப்
பிரசங்கித்தனர்.
அவர்களுடைய தவறான நடத்தை மற்றும் நோக்கம் தங்களுக்கு
ஒரு வெற்றிகரமான பிம்பத்தை உருவாக்குவதாகும், கர்த்தாரால்
நியமிக்கப்பட்ட அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர்களாக தங்களை
வெளிப்படுத்திக் கொள்ள கடினமாக முயன்றார்கள்.
அவர்களின் தவறான எண்ணம் தங்களுக்கு நற்பெயர் பெறுவது,
அனைவராலும் மதிக்கப்படுவது மற்றும் அனைவராலும்
மரியாதையை செலுத்தப்படுவதாகும்.
அந்த போதகர்கள் கிறிஸ்து மீதான அன்பினாலோ அல்லது
அர்பணிப்போ கொண்டு பிரசங்கிக்கவில்லை மாறாக நற்செய்தியை
ஒரு பேச்சு போட்டியாக மாற்றினார்கள்.
தான் விரும்பிகள் குறித்தும் சுயநல லட்சியமுடையவர்களை
குறித்தும் பவுல் வருத்தப்படுத்தவில்லை ஏனென்றால் அவர்களின்
நோக்கங்கள் நன்மையாக மாறியது; கிறிஸ்து பிரசங்கிக்கப்பட்டார்.
வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து
அறிவிக்கப்படுவதினால், பவுல் சந்தோஷமடைந்தார். (v18)
பவுலின் கூற்றுப்படி, கர்த்தரின் ஊழியர்கள் தாங்கள் நீதியின்
ஊழியர்களாக மாறுவேடமிட்டால், அவர்களுடைய செயல்களுக்கு
தகுதியானது அவர்களின் முடிவாக இருக்கும் (2 கொரிந்தியர் 11: 13-
15, 2 பேதுரு 2: 1-3).
ஆனால் பவுலுக்கு மிகவும் முக்கியமானது "கிறிஸ்து
பிரசங்கிக்கப்படுகிறார்".
கர்த்தரின் பிள்ளைகளாகிய நாம் கர்த்தரின் ஊழியர்களான பவுல்,
பேதுரு, தீமோத்தி, யோவான் ஆகியோரால் (கொலோசெயர் 2: 8,
கலாத்தியர் 1: 6-10, I தீமோத்தேயு 4: 1-2, 2 பேதுரு 2: 1) வஞ்சக
ஆவிகள் குறித்து எச்சரிக்கப்படுகிறோம். அது இயேசு கிறிஸ்துவின்
பெயரால் பொய் சொல்கிறது.
பவுல் அவரைச் சுற்றி போட்டியாளர்களைக் கொண்டிருந்தால்,
கிறிஸ்துவின் நற்செய்தியை பிரசங்கிக்க நல்ல நோக்கங்களை
அடக்க நம்மைச் சுற்றிலும் பலர் இருப்பார்கள்.
ஆனால் நாம் அவர்களுக்கு எதிராக போட்டியிடாமல், கர்த்தரின்
வார்த்தையைப் பிரசங்கிக்க வேண்டும்; நற்செய்தியில் உள்ள
உண்மையை
1. நம்பிக்கை
2. தைரியம்
3. விசுவாசம்
4. அதிகாரம்
5. பரிசுத்த ஆவியின் மூலம் வல்லமை
6. கர்த்தரால் சொல்லப்பட்ட வார்த்தைகள்
7. தெய்வீக வெளிப்பாடு மற்றும் தீர்க்கதரிசனங்களுடன்
8. தண்டனையுடன்
9. கிறிஸ்துவின் மீதுள்ள அன்பினால்
10. உறுதியுடன்
பிரசங்கிக்க வேண்டும்.
சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த்
திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும்
உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.
2 தீமோ 2: 4
அதே சமயம், நாமும் புண்படுத்தப்படுவோம். பவுலைப் போல,
கிறிஸ்து நம் மூலம் போதிக்கப்படுகிறார் மற்றும் உலகம்
முழுவதும் பிரசங்கிக்கப்படுவார் என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
ஜெபிப்போம்:
அன்புள்ள ஆண்டவரே, சுவிசேஷத்தை சுயநல லட்சியத்தினால்
அல்ல, ஆனால் அந்த வார்த்தையைக் கேட்கும் மக்கள்
இரட்சிக்கப்பட்டு, மாற்றப்பட்டு, நற்செய்தியைப் பிரசங்கித்து சரியான
மனப்பான்மையுடன் பிரசங்கிப்பார்கள் என்று உணர உதவும்.
இயேசுவின் நாமத்தில். ஆமென்
Comments (0)
To leave or reply to comments, please download free Podbean or
No Comments
To leave or reply to comments,
please download free Podbean App.