Episodes
Saturday Sep 04, 2021
வனாந்திரத்திலே கர்த்தரை காணுதல்
Saturday Sep 04, 2021
Saturday Sep 04, 2021
அக்கினியால் ஜுவாலித்து எரியும் முட்செடி
[வனாந்திரத்திலே கர்த்தரை காணுதல்]
யாத்திராகமம் 3: 14
எல்லோருக்கும் எரியும் முட்செடி போன்ற தருணத்தை விரும்பலாம்
அல்லது தேவைப்படலாம். கர்த்தரை அவரது மகிமையில் சந்திக்க,
அவரைப் பார்க்க மற்றும் அவரது அழகில் அவரது அனைத்து
மகிமையையும் போற்றவும் மற்றும் அவரது முன்னிலையில்
மகிழ்ச்சியடையவும்.
தனது தலைமுறையில் வாழ்ந்த சில எபிரேய குழந்தைகளில்
மோசேயும் ஒருவர். கர்த்தர் அவருடைய பிறப்பிலிருந்தே அவரைத்
தேர்ந்தெடுத்தார், அவருடைய நோக்கங்களை நிறைவேற்ற
மோசேயை அவரை ஒதுக்கி வைத்தார்.
மோசேயின் பெற்றோர் அவரை விட்டுக்கொடுக்கவும் தயாராக
இருந்தனர், கர்த்தர் அவரை பாதுகாப்பார் என்று விசுவாசித்தனர்.
பார்வோனுடையே ஆணை இருந்தபோதிலும், அவனுடைய மகள்
கண்டனம் செய்யப்பட்ட எபிரேய குழந்தையை தத்தெடுத்து அதே
வீட்டில் வளர்த்தால். இது கர்த்தரால் நடந்த காரியம்.
சில சமயங்களில், நமக்கு வசதியான இடத்தை விட்டு
வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு, கடினமான சூழ்நிலைக்கு
நகர்த்தப்படுவோம், அதனால் கர்த்தரின் இரக்கம் அந்த
சூழ்நிலையில் நுழையும்.
மோசே ஒரு அருமையான சூழலில் வளர்க்கப்பட்டார். ஆயினும்கூட,
அவர் ஒரு எகிப்தியர் அல்ல என்பதை அவர் ஒருபோதும்
மறக்கவில்லை.
மோசே வளர்ந்த பிறகு, அவர் தனது சொந்த மக்கள் இருக்கும்
இடத்திற்குச் சென்று அவர்களின் கடின உழைப்பில் அவர்களைப்
பார்த்தார். ஒரு எகிப்தியர் தனது சொந்த மக்களில் ஒரு எபிரேயரை
அடிப்பதை அவர் கண்டார்.
மோசே அநியாயம்நேர்த்தப்பட்ட எபிரேயருக்காக நின்றபோது,
அவர் வித்தியாசமானவர் என்று எப்போதும் வலியுறுத்தி வந்த
தன்னுள் இருந்த உள்ளார்ந்த ஆவியைப் பயன்படுத்தினார். அவர்
ஒரு நோக்கத்திற்காக அனுப்பப்பட்டார்.
நாமும் நம் குடும்பம், நமது பின்னணி, நமது கல்வி, நம்முடைய
பணியிடம், மற்றும் நமது உடல் சூழ்நிலைகளில், ஒரு
காரணத்திற்காக வைக்கப்பட்டுள்ளோம்.
ஆனால் நியமிக்கப்பட்ட நேரத்தில், கர்த்தர் நம்மைப்
பயன்படுத்துவார் மற்றும் பெரிய காரியங்களை செய்ய நம்மை
அனல்மூட்டுவார். அநீதிக்கு எதிராக நாம் நிற்பதற்கு.
மோசே ஒரு குற்றம் செய்தார். அவர் எகிப்தியனை கொன்றபோது,
அவர் அங்கிருந்து மீதியானுக்கு ஓடினார்.
அவர் தப்பித்து அங்கு தனது குடும்பத்தினரையும் உறவினர்களையும்
சந்தித்தார், பல நாட்கள் காத்திருந்த வேளையில், தன சுபாவங்கள்
மாற்றப்பட்டு ஆடுகளை மேய்த்தார்.
சற்றும் எதிர்பாராத நாளிலே, கர்த்தர் மோசேக்கு தன்னை
வெளிப்படுத்தினார். ஒரு முட்செடி அக்கினியால் ஜுவாலித்து
எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்ததை பார்த்ததை விட வேறு
எதுவும் ஆச்சரியமாக இருக்காது. எகிப்தில் அவர்
பார்த்திருக்கக்கூடிய அதிசயங்கள், பொக்கிஷங்கள் மற்றும்
ஆடம்பரங்களுடன் கூட இது ஒப்பிடமுடியாது.
எரியும் புதரில் கர்த்தருடனான சந்திப்பு அவரை மாற்றியது.
அதேபோல், நாம் கர்த்தரை சந்திக்கும் போது, நாமும்
உருமாறுகிறோம். நம் இருப்பின் மையப்பகுதி அக்கினியால்
ஜுவாலையாகிறது.
ஒரு இளவரச வாழ்க்கையிலிருந்து ஒரு கொலைகாரனாக,
ஆயிரக்கணக்கானோரை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்த
கர்த்தருடைய ஊழியன் வரை, கர்த்தரை சார்ந்திருப்பதன் மூலமும்,
அவர்கள் எங்கு சென்றாலும் அவருடைய மகிமையைச் சுமப்பதன்
மூலமும் மோசே அவர்களின் இரட்சகராகவும், விடுவிப்பவராகவும்
இருந்தார்.
கிறிஸ்து பிதாவாகிய தேவனுக்கு சமர்ப்பிப்பதன் மூலம் அனைவரின்
மீட்பராகவும், கர்த்தரை சார்ந்திருப்பதன் மூலமும் அவருடைய
உயிரைக் கொடுத்ததன் மூலம் நாம் இரட்சிக்கப்படுவது அவருடைய
விருப்பமாக இருந்தது.
மோசே கர்த்தராகிய யெகோவாவிடமிருந்து 10 கட்டளைகளை
நேரடியாகப் பெற்று அதனை பின்பற்றுவதாக மக்களுக்கு
கொடுத்தார்.
இயேசுவே பெரிய கட்டளையை கொடுத்தவர்.
இஸ்ரவேலர்களை சர்ப்பங்கள் கடித்தபோது மோசே ஒரு
கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு
கம்பத்தின்மேல் தூக்கி வைத்தார், அதனால் கடிக்கப்பட்டவன்
எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்த்தால் பிழைத்தான்.
கர்த்தர் இயேசுவை சிலுவையில் உயர்த்தினார், அதனால் அவரைப்
பார்த்த அனைவரும் நித்தியஜீவனை அடையும்படி
இரட்சிக்கப்படுவார்கள்.
மேல்வீட்டு அறையில் கூடியிருந்த சீஷர்கள் தலையில் அக்கினியின்
நாவுகள் இறங்கினதை அப்போஸ்தலர் 2: 1-4 -ல் வாசிக்கிறோம்.
கர்த்தரின் பிரசன்னம் நம்மீது இருக்கும்போது, அவருக்காக
அவருடைய வார்த்தைகளை சொல்லுவதில் நாம்
அக்கறைகொள்கிறோம், , அவருடைய செயல்களைச் செய்ய
அக்கினியால் ஜுவாலையாக எரிகிறோம்.
ஜெபிப்போம்:
அன்புள்ள ஆண்டவரே, உமக்காக அக்கினியால் ஜுவாலையாக
எரிய எங்கள் வாழ்க்கையை மாற்றும் உம்முடனான சந்திப்பை
எங்களுக்கு தாரும். இயேசுவின் நாமத்தில். ஆமென்
Comments (0)
To leave or reply to comments, please download free Podbean or
No Comments
To leave or reply to comments,
please download free Podbean App.