Episodes
Tuesday Aug 31, 2021
பரலோகத்தின் குடியிருப்புகள்
Tuesday Aug 31, 2021
Tuesday Aug 31, 2021
பரலோகத்தின் குடியிருப்புகள்
பிலிப்பியர் 3: 15-21
உண்மையில் முதிர்ச்சியடைந்தவர்களுக்கு இந்த மனம் இருக்கும்.
பவுல் தனது சொந்த மக்களைக் கர்த்தர் கையாளுவதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.
அவர் அவர்களை சமாதானப்படுத்தத் தவறினால், அவர்கள் ஒருபோதும்
சமாதானமடையமாட்டார்கள் என்ற மனப்பான்மை அவருக்கு இல்லை.
கர்த்தரின் விருப்பம் என்று தனக்குத் தெரிந்ததை யாரும் செய்யகூடாமல் போவதற்கு
அதைக்குறித்த புரிதலின் குறைபாடு என்பது காரணமாக இருக்க பவுல் அனுமதிக்க மாட்டார்.
நமக்குத் தெரியாதாது நமக்கு தெரிந்ததை நாம் செய்யத் தவற வைப்பதில்லை.
இது பிலிப்பியர் 2: 1-2 க்கு குறிப்பிடும் ஒற்றுமைக்கான (சத்தியத்தின் ஒற்றுமை, சட்ட
வல்லுநர்களால் கொண்டுவரப்படும் பிரிவுக்கு எதிராக) அழைப்பு.
பிலிப்பியர்கள் எதிர்கொள்ளும் ஒற்றுமையின் சிக்கல்கள் கொரிந்தியர்களைப் போல
மாம்சத்தினால் வந்த பெரும் பிரச்சினைகளிலிருந்து தோன்றவில்லை (1 கொரிந்தியர் 3: 1-4).
மாறாக அது அழுத்தத்தால் கொண்டுவரப்பட்ட ஆபத்தாக தோன்றியது, வெளியில் இருந்தும்
(பிலிப்பியர் 1: 27-30) மற்றும் உள்ளிருந்து (பிலிப்பியர் 3: 2) இந்த அழுத்தம் அவர்களைத்
பிரிப்பதற்கு பதிலாக அவர்கள் எல்லோரையும் ஒருமைபடுத்த வேண்டும் என்று பவுல்
விரும்பினார்.
அவர் தான் ஒரு பாவமற்ற, சரியான உதாரணம் அல்ல என்பதை அவர் அறிந்திருந்தார்,
எனினும் அவர் ஒரு நல்ல உதாரணமே. அவர் 1 கொரிந்தியர் 11: 1 -ல் சொன்னதை போல
இங்கும் சொல்ல முடியும் - நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப்
பின்பற்றுகிறவர்களாயிருங்கள்.
அதேபோல், இன்று நம் தேவாலயங்களில் குடும்பங்களாக மற்றும் தனிநபர்களாக வலுவான
முன்மாதிரிகள் தேவை.
தான் கற்பிப்பதற்கு மாறாக நடப்பவர்கள் பலர் இருப்பதை பவுல் உணர்கிறார். அவர்
அவர்களை கிறிஸ்துவின் சிலுவையின் எதிரிகளாக கருதுகிறார்.
இந்த மக்கள் உண்மையிலேயே கிறிஸ்துவின் சிலுவையின் எதிரிகளாக இருந்தனர், அவர்கள்
இயேசுவை போல சுயத்தை வெறுத்து சிலுவையை எடுத்துக்கொண்டு அவரைப் பின்பற்ற
விரும்பவில்லை (மத்தேயு 16: 24-26).
#1 அவர்களின் எதிர்காலம் அழிவு
#2 அவர்களின் தேவன் அவர்களின் வயிறு
#3 அவர்களின் மகிமை அவமானத்தில் உள்ளது
#4 அவர்களின் மனம் பூமிக்குரிய விஷயங்களில் அமைந்திருக்கிறது
பிலிப்பியர்கள் தங்களை ரோம சட்டங்கள் மற்றும் பழக்கவழக்கங்களின் கீழ் இருப்பதால்
ரோம குடிமக்களாகக் கருதுவது போல் கிறிஸ்தவர்கள் தங்களை பரலோகத்தின் குடிமக்களாக
கருத வேண்டும் என்று பவுல் ஊக்குவித்தார்.
#1 பரலோகத்தில் எங்கள் வீடு உள்ளது
#2 நாம் பூமியில் பரதேசியாய் இருக்கிரோம்
#3 வெளிநாட்டவர்கள் நிலத்தில் வேறுபடுகிறார்கள்.
#4 கிறிஸ்தவர்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும்.
பரலோகத்தின் குடிமக்களாக நமக்கு சில குறிப்பிட்ட தன்மை உள்ளது.
#1 குடிமக்களாக நாம் பரலோகத்தின் ராஜ்யத்தின் கீழ் இருக்கிறோம்.
#2 குடிமக்களாகிய நாம் பரலோகத்தின் மரியாதைகளில் பங்கு கொள்கிறோம்.
#3 குடிமக்களாகிய நமக்கு பரலோகத்தில் சொத்துரிமை உள்ளது.
#4 குடிமக்களாகிய நாம் பரலோகத்தின் இன்பங்களை அனுபவிக்கிறோம்.
#5 பரலோகத்தின் குடிமக்களாகிய நாம் பரலோகத்தை நேசிக்கிறோம், அங்கு
இணைந்திருப்பதை உணர்கிறோம்.
#6 பரலோகத்தின் குடிமக்களாகிய நாம் நம் சொந்த வீட்டோடு தொடர்பு கொள்கிறோம்.
ஜெபிப்போம்:
பரலோகத் தந்தையே, உம்மில் முதிர்ச்சியடைய எங்களுக்கு உதவுங்கள். இந்த உலகம் மற்றும்
நித்தியத்தில் எங்கள் பங்கு மற்றும் எங்கள் நிலையை உணர எங்களுக்கு உதவுங்கள்.
உங்களைப் போல் எங்களுக்கும் மனம் இருக்க வேண்டும் என்பதை எங்களுக்கு
உணர்த்துபடியாக நாங்கள் ஜெபிக்கிறோம். ஆமென்.
Comments (0)
To leave or reply to comments, please download free Podbean or
No Comments
To leave or reply to comments,
please download free Podbean App.