Episodes

Friday Sep 17, 2021
தனிப்பட்ட எழுதப்புதல்
Friday Sep 17, 2021
Friday Sep 17, 2021
சங்கீதம் 85: 6 உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர்
எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ?
ஆண்டவரே, எழுப்புதலை தாரும், அது என்னிடமிருந்து தொடங்கட்டும்!
தேவனிடமிருந்து தனிப்பட்ட எழுப்புதலின் தொடுதலுக்காக நீங்கள்
திறந்து கொடுக்க பரிசுத்த ஆவியானவரை அனுமதியுங்கள்.
சிங்கப்பூருக்கு எழுப்புதலை அனுப்புமாறு நாம் பரலோகத்தை நோக்கி
ஜெபித்துக்கொண்டிருக்கிறோம்.
அவருடைய தெய்வீக வருகையும், கர்த்தரின் வல்லமையான செயலும்,
நமது தேசத்தில் வர, முதலில் நம் மக்கள் மீது வர வேண்டும்.
இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களிடம், "உங்கள் விளக்குகள் எரிகிறதாக
இருங்கள்," என்றார் (லூக்கா 12:35).
நம்மில் பலர் தேவனுக்காக மீண்டும் அனலுள்ளவர்களாக வேண்டும்.
"எங்களை மீண்டும் உயிர்ப்பியுங்கள்" என்று நாங்கள் தேவனிடம்
கேட்கிறோம்.
கர்த்தரின் பரிசுத்த ஆவியால் நாம் ஆவியில் உற்சாகமாக வேண்டும்,
ஆவியிலே பரலோகத்தின் உறுதிப்பாட்டோடு, அவருக்கு அதிக
பக்தியுடன், விரிவான பார்வையுடன் அவருடைய நாமத்தை
தொலைந்த உலகிற்கு நாம் ஊழியம் செய்வோம்.
கர்த்தர் விரும்பினால், அவர் நேரடியாக சுவிசேஷத்தை
பரலோகத்திலிருந்து பிரசங்கிக்க முடியும். ஆனால் அதற்கு பதிலாக,
அவர் பூமியில் அவரைப் பின்பற்றுபவர்களான நம்மை பயன்படுத்தத்
தேர்ந்தெடுத்தார்.
இங்கு தொலைந்த உலகிற்கு ஆவியில் எழுப்புதல் வர, முதலில் நாம்
உயிர்ப்பிக்கப்படுவதும் மற்றும் தேவனுக்காக அதிக அளவு
செயல்திறனைத் கொண்டவர்களாய் உற்சாகமுடன் இருப்பதும் மிகவும்
முக்கியம்.
நம்மில் பலர் நமது வாழ்க்கையில் தேவனுடன் பல அனுபவங்களை
கொண்டுள்ளோம். சிலர் ஆவிக்குரிய எழுப்புதல் பரவும் காலங்களை
அனுபவித்தும் உள்ளோம்.
அந்த உற்சாகமான காலங்களுக்கிடையேயான ஆண்டுகளில், கர்த்தரின்
மக்கள் பூமியில் தேவனின் வேலைக்காக தங்கள் முந்தைய ஆர்வத்தை
இழந்து குளிர்விக்க முனைகிறார்கள்.
2 நாளாகமம் 7:14 என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத்
தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத
வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற
நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு
க்ஷேமத்தைக் கொடுப்பேன்.
எழுப்புதல் ஆவியில் உயிரடைந்த நம்மிடமிருந்து தொடங்குகிறது.
கர்த்தர் நம்மை "என் ஜனங்கள்" என்று அழைக்கிறார்
நம்மை நாமே தாழ்த்துவோம்.
கர்த்தரை அவருடைய வார்த்தையிலும், ஆராதனையிலும்,
ஜெபத்திலும் தேடுவோம்.
நம் பாவத்திலிருந்து, தீய வழியிலிருந்தும் விலகுவோம்.
பின்பு விசுவாசத்துடன் கர்த்தர் உலாவ, பரலோகத்திலிருந்து நம்
ஜெபத்தை கேட்க, நம் தேசத்தை குணமாக்க காத்திருப்போம்.
ஜெபிப்போம்:
ஆண்டவரே, எங்களை உயிர்ப்பியுங்கள், மற்றவர்களுடன் பகிர்ந்து
கொள்வதற்கு முன்பு நாங்கள் முதலில் உயிரடைய, எழுப்புதலின் முதல்
பலனை தனிப்பட்ட முறையில் சுவைக்க உதவும். ஜெபத்திலும்
செயலிலும் தன்னலமற்றவர்களாக இருக்க எங்களுக்கு உதவுங்கள்.
நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும், சரியான விஷயங்களைச்
செய்யவும், மேலும் எங்கள் ஆவியைத் உற்சாகப்படுத்த உம்மை
அனுமதிக்கவும் எங்களுக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்தில்.
ஆமென்
No comments yet. Be the first to say something!