Episodes
Thursday Aug 12, 2021
சுவிசேஷத்தை பிரபலமாக்குதல்
Thursday Aug 12, 2021
Thursday Aug 12, 2021
பிலிப்பியர் 1: 12-15
சுவிசேஷத்தை பிரபலமாக்குதல்
12. சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம்
பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய
மனதாயிருக்கிறேன்.
13. அரமனையெங்குமுள்ளவர்களுக்கும் மற்ற யாவருக்கும் என்
கட்டுகள் கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமாகி,
14. சகோதரரில் அநேகர் என்
கட்டுகளாலே கர்த்தருக்குள் திடன்கொண்டு பயமில்லாமல்
திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள்.
அக்காலத்தில், நற்செய்தியைப் பரப்பிய மிஷனரிகள் ஒரு
வெளிநாட்டிற்கு கப்பல்களில் சென்றனர், தங்கள் தாயகத்துக்கு
மீண்டும் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
அவர்களின் விடைபெறுதல் அவர்களின் நண்பர்கள் மற்றும்
குடும்பத்தினருக்கு இறுதியாக இருந்தது. பின்வாங்குவதற்கு வழி
இல்லை.
இன்று தொழில்நுட்பம் மிகவும் முன்னேறியுள்ளது, ஆயினும்,
முன்னோடியாக இருப்பவர்களுக்கு இன்னும் பல தியாகம்
செய்யகின்றனர், அவர்கள் ஆவிக்குரிய இருளின் எல்லைகளை
கடந்து செல்வதற்கு அவர்கள் கொடுக்கின்ற விலையை எண்ணி
பாருங்கள்.
இவை புறக்கணிக்கப்பட்ட மக்கள், புதிய குழுக்கள் மற்றும்
ஒடுக்கப்பட்ட மக்களை சென்றடைவதற்காக செய்கின்றனர்.
சிறையில் அடைக்கப்பட்ட பவுலை நாம் கருத்தில் கொள்ளும்போது,
நம்மில் பலர் மனம்கசந்து இதை செய்வதை விட்டுவிடலாம்.
ஆனால் பவுல் இதை நற்செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு
வாய்ப்பாகப் பார்த்தார்.
இந்த தடைகள் கர்த்தருக்குள் வாய்ப்புகள் என்றும் உண்மையில்
நற்செய்தியை எதுவும் குறைத்துவிட முடியாது என்பதை அவர்
அறிந்திருந்தார்.
நீங்கள் இதை நினைத்து பார்த்தீர்கள் என்றால் இது ஒரு
அற்புதமான வார்த்தை.
பவுல் பிலிப்பியர்களுடன் இருந்தபோது, கர்த்தரின் பெரிதான
வல்லமையினால் பல அற்புதங்கள் நடந்தன, சிறைச்சாலை
திறந்தது, அதிகாரிகள் அவர்களை விடுவித்தனர். (அப். 16: 11-40).
பவுலின் சிறைவாசத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளும் அதன்
நடுவில் நடந்த அற்புதங்களும் அவர் மற்றொரு கைதியை
போலல்லாமல், அவர் இயேசு கிறிஸ்துவிவை உடையவர் என்பதை
அவை அனைத்தையும் கண்டவர்கள் உணர்ந்தனர்.
இந்த சாட்சி சில சிறைச்சாலை காவலர்களின் மாற்றத்திற்கு
வழிவகுத்தது.
சிலர் ஊழியத்தில் பவுலை "மிஞ்ச" விரும்புவதால், தங்கள் சொந்த
பெயரை பெரிதுபடுத்தி அதை பவுலின் பெயருக்கு மேல் வைக்க
விரும்புவதை பவுல் அறிந்திருந்தார்.
லட்சியம் என்பது அவசியம், அது தவறானது அல்ல; கர்த்தருக்காக
நாம் சிறந்தவராக இருக்க விரும்புவதில் தவறில்லை.
ஆனால் சுயநலமான லட்சியம் கர்த்தருக்கு முன்பாக உண்மையான
வெற்றிக்காக பாடுபடுவதற்குப் பதிலாக, தன் சொந்த பிம்பத்தின்
வெற்றிகாக பாடுபடுகிறது.
இந்த கடினமான காலத்தில், கிறிஸ்துவுக்காகவும்
நற்செய்திக்காகவும் பயமின்றி வாழ்வோம், சொல்லுவோம். நாம்
அதைச் செய்யும்போது மற்றவர்களையும் அவ்வாறே செய்ய
ஊக்குவிக்கிறோம். சுவிசேஷத்தை மிகவும் தேவைப்படுபவர்களுடன்
பகிர்ந்துகொள்ள சுயநல லட்சியத்துடன் எதையும் செய்யாமல்
சுயநலமற்ற லட்சியத்துடன் நாம் செய்வோம்.
நாம் அதைச் செய்யும்போது, பவுல் மூலம் கர்த்தர் ரோமாபுரியில்
செய்ததை நம்மிடையே செய்வதை நம் கண்களால் காண முடியும்.
ஜெபிப்போம்:
தகப்பனே, தன்னம்பிக்கை என்பது என்னுடைய சொந்த முயற்சியால்
பெறமுடிவதோ, நன்மையான காரியங்களை
நினைத்துக்கொள்வதற்கான போராட்டமோ இல்லை என்று உணர
எனக்கு உதவும். அது கர்த்தர் எனக்குள்ளே ஜீவிப்பதினாலும்,
அவரால் எல்லா சூழ்நிலைகளையும் சந்திக்க கூடும் என்று அவர்மீது
கொள்ளும் நம்பிக்கையினால் உண்டாகிறது என்று உணர
உதவுங்கள்.
ஆமென்.
Comments (0)
To leave or reply to comments, please download free Podbean or
No Comments
To leave or reply to comments,
please download free Podbean App.