Episodes
Monday Oct 04, 2021
சாத்தானை கட்டுதல்
Monday Oct 04, 2021
Monday Oct 04, 2021
கிறிஸ்து நம்மை விடுதலையாக்குவதற்கே விடுவித்தார். நீங்கள்
மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு
உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்.
(கலாத்தியர். 5: 1).
ஒரு கிறிஸ்தவரோ அல்லது திருச்சபையோ ஆவியில் பலவீனமாய்
இருப்பதற்கு பொதுவான காரணம் நீதியாய் இல்லாமல், பக்தியோடு
இருப்பது போல் தோற்றம் அளிக்கும் மாமிசத்தை அறிந்துகொள்ளாமல்
இருப்பது.
கெத்செமனே பூங்காவிலே பேதுரு தன் பட்டயத்தை உருவினது போல,
மாமிசத்திலுள்ள கிறிஸ்தவர் தான் கர்த்தரின் விருப்பத்தைச்
செய்வதாகவும், யுத்தங்களில் கர்த்தருக்காக சண்டையிடுவதாகவும்
நினைக்கிறார்.
கிறிஸ்தவர்களுக்கு "பிசாசை எதிர்த்து நில் என்று கூறப்பட்டுள்ளது.
தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளவதன் மூலம்
பிசாசை எதிர்த்து நிற்க முடியும் என்று பவுல் எபேசியர் 6 இல்
விவரிக்கிறார்.
மத்தேயு 18:18 இல் குறிப்பிடப்பட்டுள்ள "கட்டுதலும்,
கட்டவிழ்க்கப்படுவதும்" விசுவாசிகளின் ஜெபத்தில்
ஒன்றிணைந்திருப்பதை குறிக்கிறது. இதுவே இந்த வார்த்தையில்
வெளிப்படுத்தப்பட்ட கர்த்தரின் வாக்குறுதியாகும்.
காலாத்தியர் 5: 19-21, விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள்,
வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள்,
மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள்
போன்றவை பிசாசின் வேலை அல்ல, ஆனால் மாம்சத்தின் வேலை
என்று நமக்கு தெளிவாகக் கூறுகிறது.
இந்த வாழ்நாளில் மாம்சத்தை வெளியேற்றுவது சாத்தியமில்லை,
மாறாக அதன் தீய குணத்தை நாம் உணர்ந்து, நமது இருதயம் மற்றும்
சிந்தனையின் தூண்டுதல்களுக்கு இதன் கொடுக்க மறுத்து, இயேசுவின்
பாலிற்காகவும் பரிசுத்தத்திற்காகவும் நாம் திரும்ப வேண்டும்.
ரோமர் 6:13:ல் நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின்
ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை
மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு
ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக
தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.
கர்த்தரின் வார்த்தையின் மூலம் கிறிஸ்தவர்கள் தங்களுடைய
மாம்சத்தை அடையாளம் கண்டு, மேலும் கர்த்தரின் வார்த்தை
விவரிக்கும் முறைபடி மாமிசத்தை ஆவிக்கு கீழ்ப்படுத்தி, தேவன்
ஏற்கனவே ஏற்பாடு செய்துள்ளதால் விடுதலையுடன் ஜீவிக்க முடியும்.
நம் நடத்தையின் மூல காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
மற்றும் நாம் ஆவிகளை கட்டுவதற்கு முன் பகுத்தறிய வேண்டும்.
நம்மில் பலர் ஆவிக்குரிய தாக்குதலுக்கு உள்ளாகிறோம் என்று
நினைத்து நம்மை ஏமாற்றிக்கொண்டு முட்டாள்களாய் வாழ்கிறோம்,
நாம் போராடுவது மாமிசத்துடன் என்று அறிந்தும், அதை
வெளிப்படுத்தவோ, விட்டுவிடவோ அல்லது எதிர்க்கவோ தயாராக
இல்லை.
நாம் ஆவிக்கு கீழ்ப்படிவதன் மூலம் உலகத்தின் முறைபடி
ஜீவிப்பதிலிருந்து நாம் சுய கட்டுப்பாடு உள்ளவர்களாய் இருக்க முடியும்.
மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச்
சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச்
சிந்திக்கிறார்கள். ரோமர் 8: 5
உங்களது மாமிசத்தை நீங்கள் கட்ட முடிந்தால், நீங்கள் அதன் மூலம்
சாத்தானின் சதித்திட்டங்களை கட்டுகிறீர்கள்.
ஜெபிப்போம்:
அன்புள்ள ஆண்டவரே, மாமிசத்தை கிரியைகளை எங்கள்
வாழ்க்கையில் அறிந்து அதை அகற்ற எங்களுக்கு பகுத்தறிவின்
இருதயத்தை தாரும். உமக்காக நீதியாகவும் உண்மையாகவும் இருக்க
எங்களுக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்தில். ஆமென்
Comments (0)
To leave or reply to comments, please download free Podbean or
No Comments
To leave or reply to comments,
please download free Podbean App.