Episodes

Monday Aug 30, 2021
கிறிஸ்துவை அறிதல்
Monday Aug 30, 2021
Monday Aug 30, 2021
கிறிஸ்துவை அறிதல்
பிலிப்பியர் 3: 9-11
நம்முடைய எல்லா பாவங்களுக்கும் கிறிஸ்து முழு விலை கொடுத்தார் என்பதை பவுல்
கண்டறிந்தார். அவரை விசுவாசிப்பதன் மூலம், கர்த்தர் பவுலுக்கு கிறிஸ்துவின் நீதியை
அணிவித்தார். அதனால் அவர் மீண்டும் பாவத்திற்கு அடிமையாவதில்லை.
சட்டத்தை கடைப்பிடிப்பதன் மூலம் ஒவ்வொரு மனிதனும் தனக்கு சொந்தமான நீதி
பெறுவதில்லை என்பதை பவுல் புரிந்து கொண்டார் - மாறாக கிறிஸ்துவின் தூய்மையான
மற்றும் பரிசுத்தமான நீதியால் கணிக்கப்படுகிறார்.
கர்த்தரின் கிருபையினால்தான் அவர் தனது ஒரே பேறான குமாரனை நம் பாவங்களுக்காக முழு
விலையையும் செலுத்த அனுப்பினார், அதனால் அவரை விசுவாசிப்பதின் மூலம் நாம்
கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் கர்த்தரின் நீதியை அணிய முடியும்.
தமஸ்கு சாலையில் வீழ்த்தப்பட்டபோது, உயிர்த்தெழுந்த தேவனின் வல்லமையை பவுல்
அறிந்து கொண்டார், அதனால் அனைத்து மாற்றங்களுக்கும் உயிருள்ள ஆண்டவர் இயேசு
கிறிஸ்துவின் அதே வலிமை தேவைப்படுகிறது, ஏனென்றால் அவர்கள் அனைவரும்
ஆவிக்குரிய மரணத்திலிருந்து உயிர்த்தெழபட வேண்டும். (எபே. 2: 4-6)
பாவத்தின் மீது வெற்றியில் நடக்கும்போது, தன வாழ்வை தக்கவைக்க அதே உயிர்த்தெழுதல்
வல்லமை விசுவாசிகளுக்கு அவசியம்.
ரோமர் 8:11 ல் அவர் விளக்குகிறார், "அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து
எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து
எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள்
சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்."
வாழ்க்கையின் வீணான தன்மையை அகற்றவும் நம்மை பரிசுத்தப்படுத்தவும் கர்த்தர்
துன்பத்தைப் பயன்படுத்துகிறார்.
நாம் சோதனைகுள்ளாக செல்லும்போது, அவருடைய வலிமையான கையின் கீழ் நம்மைத்
தாழ்த்தி, நம் துன்பத்தின் மீது அவருடைய ஆளுமை உள்ளது என்று நம்பி, நம்முடைய
அனைத்து பாரங்களை அவர் மீது சுமத்தி நாம் அவருடைய வழிநடத்துதலுக்கு இசைந்து வாழ
வேண்டும்.
கலாத்தியர் 2:20 இல் பவுல் கூறுகிறார், “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்;
ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்;
நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத்
தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே
பிழைத்திருக்கிறேன்."
இயேசு தனது சொந்த வல்லமையிலோ அல்லது தன் சொந்த முடிவிற்காக இடம்கொடுக்காமல்
சோதனைகளை மேற்கொண்டார். அவர் பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற மட்டுமே
வாழ்ந்தார்.
பரிசுத்தப்படுத்தும் செயல்முறை நிறைவடையும். நாமும் அவரைப்போல், பாவத்திலிருந்து
முற்றிலும் விலகி, நித்தியம் முழுவதும் அவருடைய மகிமையில் பங்கு கொள்கிறோம்.
யோவான் இந்த அற்புதமான உண்மையை இவ்வாறு பயன்படுத்துகிறார், “அவர்மேல்
இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல,
தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்." (1 யோவான் 3: 2, 3).
நம்முடைய குறிக்கோள் இயேசு கிறிஸ்துவை அறிந்துகொள்வது மற்றும் அவரைப் போல
மேலும் ஆக வேண்டும். நாம் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை நம்பியிருக்க
வேண்டிய பல சோதனைகள் நமக்கு இருக்கும்.
கிறிஸ்துவை அறிவதற்கான வாய்ப்பாக அனைத்தையும் பார்க்க வேண்டும், அவர் வரும் அந்த
மகத்தான நாளுக்கு அது நம்மை தயார்படுத்துகிறது என்றும், நாம் அவருடன் நித்திய
காலத்திற்கு மகிமையுடன் எழுப்பப்படுவோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஜெபிப்போம்:
பிதாவே, நாங்கள் கிறிஸ்துவை மேலும் அறியவும், அவருடைய உயிர்த்தெழுந்த வல்லமையை
அறியவும் ஏங்குகிறோம். உங்களது ஆவிக்குக் கீழ்ப்படிந்து எங்கள் வாழ்வில் உள்ள அனைத்து
துன்பங்களிலும் பங்குபெற நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம், மேலும் நாளுக்கு நாள்
நாங்கள் இயேசுவின் சாயலாக மாற அந்த நாமத்தில் இந்த ஜெபங்களை ஏறெடுக்கிறேன்.
ஆமென்.
No comments yet. Be the first to say something!