Episodes
Tuesday Sep 28, 2021
இயேசுவும் குற்றம் சுமத்தப்பட்ட பெண்ணும்
Tuesday Sep 28, 2021
Tuesday Sep 28, 2021
இயேசுவும் குற்றம் சுமத்தப்பட்ட பெண்ணும்
யோவான் 8: 1- 11
இயேசு காலையிலே தேவாலயத்திற்கு வந்தபோது,
ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து
அவர்களுக்கு உபதேசம்பண்ணினார். அப்பொழுது விபசாரத்திலே
கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும்
அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி: போதகரே, இந்த
ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.
இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே
நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன
சொல்லுகிறீர் என்றார்கள்.
இயேசு, இஸ்ரவேலில் உள்ள ஜனங்களுக்கு வல்லமையை ஊழியம்
செய்தார் இதனால் பலர் இயேசுவை நம்பினர்.
அவர்கள் தங்கள் பாவங்களுக்காக மனந்திரும்பி, ஞானஸ்நானம்
பெற்று, இயேசு கிறிஸ்துவை தங்கள் ஆண்டவராகவும் இரட்சகராகவும்
ஏற்றுக்கொண்டனர்.
இயேசுவின் செயல்களால் இஸ்ரேலில் மக்கள் எவ்வாறு
திகைத்துப்போனார்கள் என வேதம் நமக்கு பல சான்றுகளை
வழங்குகிறது (லூக்கா 2:47, மத்தேயு 13:54, மார்க் 1:27); அவர் ஞானத்துடன்
பேசினார், அதிகாரத்துடன் அவர் தீமையை கண்டித்தார், இரக்கத்துடன்
அவர் நோயாளிகளை மன்னித்தார் மற்றும் குணப்படுத்தினார்.
அதே சமயம், மறுபுறம், பரிசேயர்களும், சதுசேயர்களும் மற்றும் மத
ஆசரியர்களின் அணுகுமுறைகள் கோபம் மற்றும் பொறாமையின்
உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
அவர்கள் இயேசுவிடம் பொறாமையுடன் வெறுப்பால் பேசினார்கள்,
இயேசுவைக் கொல்ல சரியான தருணத்திற்கு காத்திருந்தனர்.
அவர்கள் "இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து
கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக்
கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள் ”
இயேசுவின் மீது குற்றம் சாட்ட அவர்கள் அத்தருணத்தை
பயன்படுத்தினார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
அவர்கள் இந்த கேள்வியை வலையை போல் பயன்படுத்தி, அவரை
குற்றம் சாட்டினர்.
மோசேயின் நியாயப்பிரமாணம், ‘விபச்சாரத்தினால் பிடிபட்ட ஆணும்
பெண்ணும் நியாயதீர்ப்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும், பின்னர்
கல்லால் அடித்து கொல்லப்பட வேண்டும்" (லேவியராகமம் 20:10,
உபாகமம் 22:23) என்று கற்பிக்கிறது.
பரிசேயர்கள் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை மட்டுமே அழைத்து
வந்தார்கள்.
இயேசு ஏற்கனவே அந்த பரிசேயர்கள் மற்றும் நியாயப்பிரமாண
ஆசிரியர்களின் நினைவுகளை அறிந்திருந்ததால் பொறுமையுடன்
இருந்தார்.
அவர்கள் மிக மோசமான பாவிகள் என்று அவருக்கு தெரியும்.
விபச்சாரத்தில் சிக்கிய அந்த பெண்ணை விடவும் அதிகமாக பாவிகளாய்
இருக்கலாம். ஏனென்றால் அவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தின்
ஆசிரியர்கள், அவர்கள் வேதத்திலும் நன்கு அறிந்தவர்கள்.
இயேசு உடனடியாக அந்த பெண்ணிடம் எதையும் விசாரிக்காமல்,
"உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது
கல்லெறியக்கடவன்" என்று கூறினார்.
இப்போது, அவர்கள் இருதயத்திலே தங்கள் குற்றத்தை உணர்ந்தார்கள்.
பரிசேயர்கள் இதுவரை இயேசுவிடம் செய்த ஒரே நல்ல விஷயம்,
அவர்களும் பாவிகள்தான் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டதுதான்.
முதலில், பெரியவர்கள் வெளியேறினர், பின்னர் இளையவர்கள், இயேசு
தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள். இயேசு மனதுருக்கம்
நிறைந்தவர், அவர் அந்தப் பெண்ணின் பாவத்தை மன்னித்தார்.
இயேசு அந்த பெண்ணையோ அல்லது ஆசரியர்களையோ கண்டனம்
செய்யவில்லை, ஆனால் ஆழ்ந்த ஞானத்தினால் எச்சரிக்கையுடன்
அவர் பரிசேயர்களுக்கு அவர்கள் பாவம் செய்ததை நினைவூட்டினார்
மற்றும் ஆழ்ந்த இரக்கமுள்ள இதயத்துடன் அந்த பெண்ணை இனி
பாவமில்லாமல் வாழ ஊக்குவித்தார்.
நாம் இந்த உலகில் மற்றவர்களை சந்திக்கும் போது, அவர்களை விட
நாம் சிறந்தவர்கள் என்று நாம் ஒருபோதும் நினைக்கக்கூடாது.
எப்போதும் நம்மை விட மற்றவர்களை சிறந்தவர்களாகவே கருதுங்கள்.
இயேசு செய்ததைப் போல மன்னிக்க தயாராக இருங்கள்.
பரிசேயர்களைப் போல உங்கள் இதயத்தில் வெறுப்பைச்
சேமிக்காதீர்கள், பொறாமை கொள்ளாதீர்கள்.
நாம் இதை செய்தால், நிச்சயமாக நம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும்
சாட்சியாக இருக்க முடியும்.
ஜெபிப்போம்:
அன்புள்ள ஆண்டவரே, எங்கள் பங்கைப் புரிந்துகொள்ள உதவுங்கள்,
எங்களை தாழ்த்தி, எங்களை விட மற்றவர்களை உயர்வாய் பார்க்க
உதவுங்கள். இயேசு நாமத்தில். ஆமென்.
Comments (0)
To leave or reply to comments, please download free Podbean or
No Comments
To leave or reply to comments,
please download free Podbean App.