Episodes
Thursday Sep 30, 2021
இயேசு சீமோனை சந்தித்தபோது
Thursday Sep 30, 2021
Thursday Sep 30, 2021
இயேசு சீமோனை சந்தித்தபோது
லூக்கா 7: 36-50
ஒரு பரிசேயரின் வீட்டில் இரவு உணவிற்கு இயேசு அழைக்கப்பட்டார். அங்கு பாவமான வாழ்க்கை வாழ்ந்த ஒரு பெண் வாழ்ந்தாள்.
அவள் ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டுவந்துஅவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமுடியால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.
இயேசுவை அழைத்த பரிசேயர் இதைப் பார்த்தபோது, இயேசு அவளைப் போன்ற ஒரு பாவமுள்ள பெண்ணை ஏன் அத்தகைய செயலை செய்ய அனுமதித்தார் என்று யோசிக்கத் தொடங்கினர்.
இயேசு அவர்களின் எண்ணங்களை அறிந்து சீமோனுக்கு ஒரு கடனாளியிடம் கடன்பட்டு திருப்பிச் செலுத்த முடியாத இரண்டு நபர்களின் உவமை மூலம் பதிலளித்தார்.
கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது இந்த கடன் வழங்கினவர் இருவருக்கும் கடனை மன்னித்தார். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் என்று சீமோனிடம் இயேசு கேட்டார். எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று சீமோன் பதிலளித்தார்.
இயேசுவை வீட்டிற்கு அழைத்து தங்கள் அன்பை காட்ட நினைத்த பரிசேயர்களுக்கும், பாவியாகிய பெண் அவர்மீது காட்டின அன்பிற்கும் உள்ள வித்தியாசத்தை இயேசு விளக்கினார்.
பரிசேயனாகிய சீமோன் தன் வீட்டிற்கு வந்த இயேசுவிற்கு விருந்தினருக்கு செய்ய வேண்டிய பொதுவான மரியாதையை செய்யவில்லை - அதாவது கால்களைக் கழுவுதல், வாழ்த்தி முத்தமிடுதல், மற்றும் எண்ணெயால் அபிஷேகம் செய்தல். ஆனாலும், இந்த மரியாதைகளை இயேசுவிற்கு செய்த அந்தப் பெண்ணை அவர் அவதூறாக பேசினார்.
அவளுடைய மிகுந்த அன்பின் காரணமாக அவள் மன்னிக்கப்படவில்லை; அவளுடைய மிகுந்த அன்பு அவள் மன்னிக்கப்பட்டாள் என்பதற்கான சான்றாகும்
அவளது மன்னிப்பிற்கான திறவுகோல் அவளுடைய விசுவாசம் - அவளுடைய விசுவாசமே அவளைக் இரட்சித்தது, ஏனென்றால் அவள் உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்ற இயேசுவின் வார்த்தைகளை நம்பினாள்.
அவளுடைய விசுவாசம் கர்த்தர் அவளுக்குக் கொடுத்த கிருபையை பெற்றுக்கொள்ள உதவியது.
மன்னிப்பு கர்த்தரிடம் தயாராக உள்ளது; அவரது தரப்பில் எந்த தயக்கமோ பற்றாக்குறையோ இல்லை.
நமது பங்கு இயேசுவுக்கு முன்பு மனத்தாழ்மையுடனும் அன்பான சமர்ப்பணத்துடனும் வருவதோடு, விசுவாசத்தால் அவர் அளிக்கும் மன்னிப்பைப் பெறுவதும் ஆகும்.
கட்டுண்டவர்களை விடுதலையாகவும் பாவிகளை விடுவிக்கவும் இயேசு பூமிக்கு வந்தார்.
அவருடைய சந்நிதியில் நாம் விடுதலை பெற முடியும், இருளின் கீழ் வாழும் மக்களுக்கு இயேசு கொடுத்த அதே விடுதலையை நாமும் அனுபவிக்க முடியும்.
அவநம்பிக்கையான சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு, மிருந்த தேவை உள்ளவர்களுக்கு, இரட்சகரின் தேவை உள்ளவர்களுக்கு நற்செய்தியை எடுத்துச் செல்ல நாம் தயாரா?
மீட்பருக்காக தேவையுள்ள மக்களின் அழுகை உங்கள் காதுகளில் எட்டுகிறதா?
நமக்கு கிடைத்த நற்செய்தியை நாம் என்ன செய்கிறோம்.
மிருந்த தேவைகளுடன் இருப்பவர்களுக்கு இந்த நற்செய்தியை நாம் எடுத்து செல்வோம்.
நாம் இந்த உலகத்தின் ஒளியாகவும் உப்பாகவும் இருக்கிறோம். இந்த உலகை மாற்றும் அளவுக்கு பிரகாசமாவும் சாரமுள்ளவர்களாவும் இருக்கிறோமா.
மத்தேயு 5: 13-16 கூறுகிறது, நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
நாம் இயேசுவுக்காக பிரகாசிக்கவும், இந்த உலகில் உப்பாக இருக்கவும், நம்மை ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.
ஜெபிப்போம்:
அன்புள்ள ஆண்டவரே, உமது மன்னிப்புக்கு நன்றி. எங்கள் வாழ்க்கையில் எங்களுக்கு உதவியதற்கு, எங்களை காப்பாற்றியதற்கு நன்றி. மிருந்த தேவை உள்ள மக்களுக்கு உம்மை சுமந்து செல்லும் நபர்களாக இருக்க எங்களுக்கு உதவுங்கள். உலகத்தின் ஒளியாகவும் உப்பாகவும் இருக்க எங்களுக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்தில். ஆமென்
Comments (0)
To leave or reply to comments, please download free Podbean or
No Comments
To leave or reply to comments,
please download free Podbean App.