Episodes

Tuesday Aug 24, 2021
அவரைப் போல் வேறு யாரும் இல்லை
Tuesday Aug 24, 2021
Tuesday Aug 24, 2021
பிலிப்பியர் 2: 19-24
அவரைப் போல் வேறு யாரும் இல்லை
அப்போஸ்தலன் பவுல் இங்கே தீமோத்தேயு மற்றும் எப்பாப்பிரோதீத்துவை பற்றிய ஒரு
விவரத்தை அளிக்கிறார்.
இயேசு கிறிஸ்துவின் குணத்தை அறியாமலேயே வெளிப்படுத்திய உண்மையான ஆண்கள்
இவர்கள், பவுலால் எழுதப்பட்ட அனைத்துக்கும் சிறந்த எடுத்துக்காட்டுகள்.
பவுல் எழுதியுள்ள தீமோத்தேயுவை இன்று சந்திக்கலாம்.
இயேசு கிறிஸ்துவுகுள்ளாக இருக்கும் திமோத்தேயுவின் குணாதிசயத்தை பவுல்
வெளிபடுத்துகிறார்.
தீமோத்தேயு ஒரு விசேஷமான மனிதர் என்பதை நாம் காண்கிறோம். அவரைப் போல் எனக்கு
வேறு யாரும் இல்லை என்று பவுல் கூறுகிறார்.
மற்றவர்கள் வெவ்வேறு காரியங்களில் ஒத்துப்போகலாம், ஆனால் ஒன்றில் மட்டும் அவர்
பிறருக்கு ஈடு இணை இல்லாமல் இருந்தார், அது அவருடைய தன்னலமற்ற கவனிப்பு,
மற்றவர்களின் நலனுக்கான உண்மையான ஆர்வமுள்ள அக்கறை.
இங்கே அவர் தீமோத்தேயுவின் கிறிஸ்தவ நல்லொழுக்கத்தை நிரூபிக்கிறார், கிறிஸ்து
உள்ளத்தில் இருக்கிறார் என்பதற்கு தனித்துவமான அடையாளம்: சுயநலமின்மை! கர்த்தராகிய
இயேசு தன்னைப் பற்றி, என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள், ஏனென்றால் நான் சாந்தமும்
மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன், என்று சொன்னார்.
அவர் இதை எழுதுகையில், பவுலின் இருதயம் முழுவதுமாய் கர்த்தரை நம்பியிருக்கிறது.
அவர் பிலிப்பியர்களிடையே திமோத்தேயுவை பார்க்க விரும்பினார், ஆனால் அது கர்த்தரின்
வழியில் மற்றும் அவருடைய நேரத்தில் நடக்கும் என்பதை உணர்ந்தார்.
பவுல் தீமோத்தேயுவை அனுப்பியபோது, அவருடன் உள்ள சிறந்த ஒன்றை அனுப்பினார், ஒரு
மேய்ப்பனின் இதயத்தைக் உடையவர் மற்றும் தன்னை விட தனது ஆடுகளின் மீது அதிக
அக்கறை கொண்டிருந்தார்.
இது போல நம் வாழ்க்கையின் சாட்சியை யாராவது எழுத முடியுமா?
ஜெபிப்போம்:
அன்புள்ள ஆண்டவரே, எங்கள் தன்னலமற்ற செயலின் மூலம் எங்களிடம்
வைக்கப்பட்டிருக்கும் உங்கள் தனித்துவமான நற்பண்புகளை வெளிக்கொணர எங்களுக்கு
உதவுங்கள். தீமோத்தேயுவைப் போல சேவை செய்ய ஒரு இருதயம் இருக்க எங்களுக்கு
உதவுங்கள். இயேசுவின் நாமத்தில். ஆமென்
No comments yet. Be the first to say something!